உத்தரப்பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் தனது அண்டை வீட்டாரால் அவரது அறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மன்சூர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் புகாரில், 40 வயது மன்வீர் டோஃபி கொடுப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பின்னர், அவர் கதறி அழுதபோது, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தேடுதல் வேட்டையின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





