கென்யாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 48 பேர் பலி
மேற்கு கென்யாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
கெரிச்சோ மற்றும் நகுரு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கென்யாவின் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.





