தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள 25 அடி உயர திருவள்ளுவர் சிலை
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
திருவள்ளுவர் சிலை 3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் (Steel) உருவாக்கப்பட்டுள்ளது.
52 கோடி இந்திய ரூபா செலவில் உருவாக்கப்படும் ‘Smart City’ திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.