ஆபாச ‘டீப்ஃபேக்’ சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்: பிரித்தானிய பிரதமர் கடும் கண்டனம்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘X’ தளத்தின் ‘Grok’ AI கருவி, பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்தரிக்கும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) படங்களை உருவாக்க அனுமதிப்பதாகப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, புகைப்படங்களில் உள்ள ஆடைகளை டிஜிட்டல் முறையில் நீக்கும் ‘நூடிஃபிகேஷன்’ (Nudification) கருவிகளாக கிராக் (Grok) பயன்படுத்தப்படுவதற்கு உலகெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது “வெட்கக்கேடானது மற்றும் அருவருப்பானது” எனப் பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ‘X’ தளத்திற்குத் தடை விதிப்பது […]













