பொழுதுபோக்கு

மறுமணம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பார்த்திபன்!

  • January 21, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவில் எப்போதும் புதுவிதமான அணுகுமுறையைக் கையாளும் நபர்களில் நடிகர் பார்த்திபன் முதன்மையானவர். புதிய பாதை மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கான வழியில் தனித்துவத்துடன் பயணித்துவருகின்றார். நடிகை சீதாவை காதலித்து 1990இல் மரம் பிடித்தார். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2004ல் விவாகரத்து பெற்றனர். சீதா மறுமணம் முடித்திருந்தாலும் பார்த்திபன் தனியாகவே வாழ்ந்து வருகிறார். […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பணவீக்கம் மீண்டும் உயர்வு

  • January 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக டிசம்பர் மாதத்தில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பரில் 3.2 சதவீதமாக இருந்த பணவீக்கம், புகையிலை வரி உயர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விமானக் கட்டண அதிகரிப்பு காரணமாக எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ரொட்டி மற்றும் தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணமாகும். இந்த உயர்வால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ (Bank […]

உலகம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

  • January 21, 2026
  • 0 Comments

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை (Shinzo Abe) கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் ஒருவருக்கு இன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 45 வயதான டெட்சுயா யமகாமி (Tetsuya Yamagami) என்ற நபருக்கே மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூலை 2022 இல் மேற்கு நகரமான நாராவில் (Nara) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வைத்து அபேயை கொலை செய்தாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மிகவும் […]

இலங்கை செய்தி

சுவிஸில் உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளை நடத்தும் பிரதமர் ஹரிணி!

  • January 21, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Harini Amarasuriya அங்கு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார். உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திவருகின்றார். அந்தவகையில் சிங்கப்பூர் Singapore ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன் Tharman Shanmugaratnam இரு தரப்பு கலந்துரையாடலில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். இதன்போது டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் […]

உலகம்

பிளவுப்படும் நேட்டோ கூட்டணி : துருப்புகளை குறைக்கும் ட்ரம்ப்!

  • January 21, 2026
  • 0 Comments

நேட்டோ கட்டளை மையங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா   திட்டமிட்டுள்ளது. வொஷிங்டனின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் கணிசமாக அதிகரிப்பதாகவும், நேட்டோ கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புதிய தகவலின்படி, நேட்டோவின் இராணுவ மற்றும்  உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் உயரதிகாரிகளில் 200 பேர் வரை நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நேட்டோ புலனாய்வு இணைவு மையம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேச நாட்டு சிறப்பு […]

செய்தி விளையாட்டு

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: சரித் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

  • January 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில், பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷன போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் கமில் மிஷார, பவன் ரத்நாயக்க மற்றும் வேகப்பந்து […]

இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியில் பாதுகாப்பு உத்தரவாதம்: வடக்கில் முதலிட வருமாறு ஆளுநர் அழைப்பு!

  • January 21, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று (21.01.2026) ஆரம்பமானது. இந்த மாநாட்டை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ (TMC) – இலங்கை ஒழுங்கமைத்திருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு […]

உலகம்

நேபாளத்தில் வர இருக்கும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் பிரபல ராப் இசை பாடகர்!

  • January 21, 2026
  • 0 Comments

நேபாளத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டம் அரசாங்கத்தை கவிழ்த்து இடைக்கால அரசாங்கம் அமைய வழிவகுத்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் நேபாள தலைநகர் காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலேந்திர ஷா முன்னணி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் முன்னாள் ராப் இசை பாடகர் ஆவார். பல இளைஞர்களை கவர்த்த இவரின் தேர்தல் அறிவிப்பு நேபாள அரசியலில் புதிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே […]

உலகம்

ஜப்பானில் எரிமலை அருகே மாயமான சுற்றுலா ஹெலிகாப்டர் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

  • January 21, 2026
  • 0 Comments

ஜப்பானின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் அசோ (Mount Aso) அருகே, சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகியுள்ளது. அசோ  நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து நேற்று புறப்பட்ட குறித்த ஹெலிகாப்டரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டமான வானிலை காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த ஹெலிகாப்டர் முந்தைய பயணங்களில் சீராக இருந்ததாக அதன் ஆப்ரேட்டர் டகுமி எண்டர்பிரைஸ் (Takumi Enterprise) நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

இந்தியா

பங்களாதேசில் தேர்தல் நெருங்கும்வேளை இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இராஜதந்திர உறவு முதல் விளையாட்டுத்துறைவரை அது தற்போது எதிரொலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பங்களாதேசில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தார் மற்றும் நெருக்கமானவர்களை நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அங்குள்ள பாதுகாப்பு சூழல் கருதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தூதரக செயற்பாடுகள் […]

error: Content is protected !!