இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது மகளை கொன்ற பெண்

  • January 21, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவின்(Maharashtra) லத்தூர்(Latur) மாவட்டத்தில், கூலித் தொழிலாளியான தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் தனது ஒரு வயது மகளைக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்யாம்(Shyam) நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தனது 34 வயது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த அந்தப் பெண் வீட்டிலிருந்து கூர்மையான கத்தியை எடுத்து தனது மகளின் முகம், வயிறு, மார்பு, இடுப்பு, தலை மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் குத்தியதாகக் கூறப்படுகிறது. […]

உலகம் செய்தி

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு

  • January 21, 2026
  • 0 Comments

2025ம் ஆண்டின் இறுதியில் உலகளவில் தங்கள் பணிக்காக சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 330 என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300த் தண்டியுள்ளதாக குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி நிலவரப்படி சீனா(China) 50 கைதிகளை சிறையில் அடைத்துள்ளது, அதைத் தொடர்ந்து மியான்மர்(Myanmar) 30 கைதிகளையும், இஸ்ரேல்(Israel) 29 பாலஸ்தீன(Palestine) பத்திரிகையாளர்களையும் தடுத்து வைத்துள்ளதாக பத்திரிகை சுதந்திர கண்காணிப்பு அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த […]

உலகம்

அமெரிக்காவை தாக்கும் பனிப்புயல் : வார இறுதியில் மக்கள் எதிர்நோக்கும் சவால்!

  • January 21, 2026
  • 0 Comments

இந்த வார இறுதியில் தெற்கு அமெரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் பனிப்புயல் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக்சாஸிலிருந்து (Texas) கரோலினாஸ் (Carolinas) வரை நீண்டுகொண்டிருக்கும் இந்த நிகழ்வை பரவலான பேரழிவு நிகழ்வு” என்று நிபுணர்கள் விவரித்துள்ளனர். இதன்காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமான சேவைகள் இரத்து மற்றும் தாமதமடையும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் பனியை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் குறைவாக […]

இலங்கை

வைத்தியர்களின் தொடர் பணி பகிஸ்கரிப்பு – அப்பாவி ஏழை மக்களுக்கே பாதிப்பு!

  • January 21, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுக்கும் தொடர்  பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையால்  அப்பாவி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பிரபல ஊடகவியலாளரொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளை நம்பி சிகிச்சைகளுக்காக வருகின்றனர். அதேநேரம்  வெளி நோயாளர் பிரிவிற்கு வரும் நோயாளர்கள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களுடைய சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மஹதிவுல்வெவ- கோமரங்கடவல […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – நியூசிலாந்து அணிக்கு 239 ஓட்டங்கள் இலக்கு

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று முதலாவது டி20 போட்டி நாக்பூரில்(Nagpur) ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில், அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 84 ஓட்டங்களும் ரிங்கு சிங்(Rinku […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளரின் மோசமான செயல் : சுற்றிவளைத்த பொலிஸார்!

  • January 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் விடுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள விடுதியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்  தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எத்தியோப்பிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அந்த நபர் இன்று மாலை சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட்  (Magistrates) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

எடின்பர்க் பாடசாலைகளில் கொண்டுவரப்படவுள்ள முக்கிய மாற்றம்!

  • January 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் எடின்பர்கில் உள்ள அனைத்து உயர்நிலை பாடசாலைகளிலும் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில்  பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. முன்னோடி திட்டமாக இரண்டு உயர்நிலை பாடசாலைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து இதனை விரிவுப்படுத்த  எடின்பர்க் நகர கவுன்சில்  ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கமைய  போர்டோபெல்லோ (Portobello) மற்றும் குயின்ஸ்ஃபெர்ரி (Queensferry) உயர்நிலைப் பாடசாலைகள் நாள் முழுவதும் தொலைபேசிகளை தவிர்க்கும் பூட்டக்கூடிய பைகளைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவ அல்லது பராமரிப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு பாடசாலைகளில் தொலைபேசி அவசியம் என்ற விவாதம் […]

SaranyaBhagyaraj #Parijatham #Bhagyaraj #Inspiration #MentalHealthRecovery #CinemaNews #TrendingNow புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

மீண்டு வந்த சரண்யா பாக்யராஜ்: 18 ஆண்டு மௌனம் கலைந்தது!

  • January 21, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவின் “திரைக்கதை மன்னன்” பாக்யராஜின் மகள் சரண்யா, சுமார் 18 ஆண்டுகாலத் தனிமைக்குப் பிறகு மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான பக்கங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். 2006-ம் ஆண்டு தனது தந்தை பாக்யராஜ் இயக்கத்தில் ‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. முதல் படத்திலேயே “உன்னைக் கண்டேனே…” பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஆனால், அதன் பிறகு ஒரு சில […]

சிவகார்த்திகேயன், வண்டலூர் பூங்கா, பிரக்ருதி யானை, விலங்குகள் தத்தெடுப்பு, Sivakarthikeyan, Vandalur Zoo, SK Fans, Animal Welfare, Prakruti Elephant. பொழுதுபோக்கு

சிங்கம், புலிக்கு அப்புறம் இப்போ யானை! சிவகார்த்திகேயனின் தத்தெடுப்புப் பட்டியல் இதோ.

  • January 21, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ‘ரியல் ஹீரோ’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘பிரக்ருதி’ (Prakruti) என்ற பெண் யானையை அவர் தத்தெடுத்துள்ளார். பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த 6 மாத காலத்திற்கு இந்த யானைக்கான உணவுத் தேவைகள், மருத்துவப் பராமரிப்பு மற்றும் தினசரி செலவுகள் அனைத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கான காசோலையை அவர் பூங்கா […]

இலங்கை செய்தி

காணி உரிமை வழங்கினால் மலையக மக்களின் தலையெழுத்து மாறும்!

  • January 21, 2026
  • 0 Comments

“மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் Jeevan Thondaman தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பெருந்தோட்ட நிறுவனங்களை நம்ப வேண்டாம் என நான் கூறினேன். அவர்களின் சூழ்ச்சி என்னவென்பது எமக்கு தெரியும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு , தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் […]

error: Content is protected !!