இலங்கை செய்தி

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ஓமான் கடற்படைக் கப்பல் ‘அல் சீப்’

  • January 22, 2026
  • 0 Comments

ஓமான் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான ‘அல் சீப்’ (AL SEEB) கப்பல், எரிபொருள் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமையச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். 75 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஹமத் பின் முகமது அல்டர்மகி (Lieutenant Commander Hamad Bin Mohammed Aldarmaki) தலைமை தாங்குகிறார். இந்த விஜயமானது இலங்கை […]

உலகம் செய்தி

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று வெளியேறுகிறது அமெரிக்கா

  • January 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்திலிருந்து இன்று உத்தியோகபூர்வமாக விலக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் உலகளாவிய சுகாதாரத்துக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளிலேயே நிர்வாக உத்தரவு மூலம் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு முன் ஒரு ஆண்டு முன் அறிவிப்பு வழங்கி, நிலுவையில் […]

ஐரோப்பா

ட்ரம்பின் அமைதி வாரிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையாது!

  • January 22, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையாது என வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியின்  மத்திய கிழக்கிற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை இங்கிலாந்து கடுமையாக ஆதரிக்கிறது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் பரந்த பிரச்சினைகள் காரணமாக இங்கிலாந்து இன்று கையெழுத்திடாது எனக் கூறியுள்ளார். இதேவேளை  உக்ரைனில் அமைதிக்கான அர்ப்பணிப்பு இல்லாதது தொடர்பிலும்,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் […]

ஐரோப்பா

மின் கட்டமைப்பை குறிவைத்து தாக்கும் ரஷ்யா : குளிரில் தவிக்கும் மக்கள்!

  • January 22, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலால் உக்ரைனின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவில் சுமார் 3,000 அடுக்குமாடி கட்டிடங்கள் வெப்பமாக்கப்படாமல் உள்ளதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff) இன்று மொஸ்கோவிற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யா “பால்டிக் கடலின் கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக […]

செய்தி பொழுதுபோக்கு

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்

  • January 22, 2026
  • 0 Comments

இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். இச்சம்பவம் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணாவுக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.   உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி கிருஷ்ணா தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக ‘விநாயகடு’, ‘100% லவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி; ஒருவர் படுகாயம்

  • January 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘லேக் காஜெல்லிகோ’ (Lake Cargelligo) எனும் சிறுநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா நேரப்படி இன்று மாலை சுமார் 4:40 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் உயிரிழந்துள்ளதை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

உலகம்

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு 23 ஆண்டுகள் சிறை!

  • January 22, 2026
  • 0 Comments

தென் கொரியாவின்  முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு ( Han Tak-soo) 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய நீதிமன்றம் நேற்று (21) இவ்வாறு தீர்ப்பளித்தது. முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோல் இராணுவச் சட்டத்தை அறிவிக்க உதவியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது. அமைச்சரவை குழுக்கள் மூலம் இராணுவச் சட்டத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு உதவியதற்காகவும், இராணுவச் சட்ட ஆவணங்களை போலியாக உருவாக்கி அழித்ததற்காகவும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர்  பதவிக்கு ஆபத்து

  • January 22, 2026
  • 0 Comments

வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பாரிய பிளவு காரணமாக, லிபரல் கட்சித் தலைவர் சூசன் லேயின் (Sussan Ley) தலைமைத்துவம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் இரண்டாவது முறையாகக் கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளதால், அவரது பதவி பறிபோகலாம் என மூத்த உறுப்பினர்கள் கருதுகின்றனர். வெறுப்புப் பேச்சுச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்த மூன்று செனட்டர்களை சூசன் லே பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து, தேசியக் கட்சித் தலைவர் […]

ஐரோப்பா

கம்போடியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தென்கொரியர்கள் – இழப்பீடு வழங்கவும் தீர்மானம்!

  • January 22, 2026
  • 0 Comments

ஆன்லைன் மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென்கொரியர்கள் இந்த வாரம் விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளனர். அத்துடன் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சமீபத்திய மாதங்களில் கம்போடியாவில் நடத்தப்பட்ட ஒரு கடுமையான சோதனை நடவடிக்கையில் தென்கொரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கம்போடியாவில் உள்ள  மோசடி வளாகத்தில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தென்கொரிய மாணவர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். […]

உலகம் செய்தி

நியூசிலாந்தில் வரலாறு காணாத கனமழை ; மண்சரிவில் பலர் மாயம்

  • January 22, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலர் காணவில்லை என அஞ்சப்படுகிறது. ஐந்து பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலா முகாமில் இன்று காலை பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவசரகாலத் துறை அமைச்சர் மார்க் மிட்செல், பாதிக்கப்பட்ட பகுதிகள் “போர் மண்டலத்தைப் போல” இருக்கின்றன என தெரிவித்தார். தீயணைப்பு துறையினர், மண்ணுக்குள் புதைந்தவர்களிடமிருந்து உதவி கோரும் குரல்கள் […]

error: Content is protected !!