அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • January 31, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறுகோரி நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துவது குறித்து எதிரணி ஆராய்ந்துவருகின்றது. சட்ட திருத்தம் ஊடாக பழைய முறையிலேயே தேர்தல் நடத்தும் சூழல் உள்ள நிலையில், அதனை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையிலேயே தேர்தல்கோரி கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி, அக்கோரிக்கை தொடர்பில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு எதிரணி திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து எதிரணிகளும் இணைந்தே கூட்டு அரசியல் சமராக […]

உலகம்

நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஐ.நா சபை – 193 நாடுகளுக்கும் எச்சரிக்கை!

  • January 31, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தங்கள் கட்டாய பங்களிப்புகளை செலுத்தத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி நெருக்கடி ஆழமடைந்து வருவதாகவும், ஐ.நா. திட்டங்களை செயல்படுத்துவதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும்  குறிப்பிட்டுள்ள அவர்,  தற்போதைய நிலைமை தொடர்ந்தால், அடுத்த ஜூலை மாதத்திற்குள் அமைப்பில் உள்ள பணம் தீர்ந்துபோகும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் 193 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் […]

உலகம்

அமெரிக்காவில் மீளவும் தலைத்தூக்கிய நிதிப்பிரச்சினை – பணிப்புறக்கணிப்பில் மத்திய அரசு!

  • January 31, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நிதிபற்றாக்குறை பிரச்சினை மீளவும் தலைத்தூக்கியுள்ள நிலையில், பகுதியளவிலான பணிநிறுத்தத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முன்னதாக அமெரிக்க கரூவூலத்துறை நிதி பிரச்சினை காரணமாக முடங்கியிருந்த நிலையில், செப்டம்பர் மாதம் நிதியளிக்க செனட் சபை ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சேவைகள் வழமைக்கு திரும்பியிருந்தன. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் மீளவும் நிதிப்பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது. மினியாபோலிஸில் இரண்டு அமெரிக்க குடிமக்கள் கூட்டாட்சி முகவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குடியேற்ற அமலாக்கத்திற்கு கூடுதல் நிதி வழங்க   மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே […]

அரசியல் இலங்கை செய்தி

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அணு ஆயுதமா?

  • January 31, 2026
  • 0 Comments

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்திலேயே அரசாங்கம் பயன்படுத்தும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். “சில நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளன. அவை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பராமரிக்கப்படும் . தேவையேற்படும் நேரத்திலேயே பயன்படுத்தப்படும். இவ்வாறுதான் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவதில்லை. தேவையான நேரத்தில் அந்த பலம் பிரயோகிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். அதேவேளை, பிர தமருக்கு எதிராக கொண்டுவரப்படும் என எதிரணிகள் கூறிய நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

இலங்கை

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • January 31, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இலங்கை தூதர் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான அவசர அறிவிப்புகள் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் அனுப்பப்படும் என்று ஆலோசனை கூறுகிறது. எச்சரிக்கை […]

விளையாட்டு

மீண்டெழுமா இலங்கை அணி? 2ஆவது T-20 போட்டி நாளை!

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான 2ஆவது T-20 போட்டி நாளை (01) நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் Pallekele International Stadium இலங்கை நேரப்படி போட்டி 7 PM மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் ODI தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் T-20 போட்டி நேற்று பல்லேகலயில் நடைபெற்றது. மழை காரணமாக […]

உலகம்

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து – 200 பேர் பலி!

  • January 31, 2026
  • 0 Comments

கிழக்கு காங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபாயா (Rubaya) கோல்டன் சுரங்கத்தில் இந்த வாரம் இடம்பெற்ற  விபத்தில் ஏறக்குறைய 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக தங்க உற்பத்தில் சுமார் 15 சதவீதத்தை ருபாயா கோல்டன் சுரங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அகழ்வில் ஈடுபடும் பலர் சுரங்க விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதற்கமைய கடந்த புதன்கிழமை சரிவு ஏற்பட்டது. இருப்பினும் நேற்றுவரை துள்ளியமான செய்திகள் வெளியாகவில்லை. இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் […]

இந்தியா

“கரூர் சம்பவம் என்னை துரத்துகிறது” – விஜயம்

  • January 31, 2026
  • 0 Comments

“கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது.” இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் TVK தலைவர் விஜய் Vijay தெரிவித்தார். NDTV நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் விஜய் பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு அவர் வழங்கிய பதில்களின் சுருக்கம் வருமாறு, 33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான […]

இலங்கை செய்தி

8 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

  • January 31, 2026
  • 0 Comments

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளுக்கு, பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய […]

இலங்கை செய்தி

சிரேஷ்ட தலைவர் மாவையின் உருவச்சிலை இன்று திறப்பு!

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK சிரேஷ்ட தலைவர் அமரர் மாவை சேனாதிராஜாவின் Mavai Senathiraja நினைவுச்சிலை இன்று (31) திறக்கப்படுகின்றது. யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நினைவுப் […]

error: Content is protected !!