இந்தியாவில் தேர்தல் வாக்குறுதிக்காக 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை
தெலுங்கானா மாநிலத்தின் கமரெட்டி மற்றும் ஹனம்கொண்டா (Kamareddy – Hanamkonda) உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, தெரு நாய்கள் மற்றும் குரங்குகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த கொடூரக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நாய்களுக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டும், நீண்ட தடிகளில் கட்டப்பட்ட ஊசிகள் […]













