உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு: எழுவர் பலி! 82 பேர் மாயம்!!

  • January 24, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் , கிராம பகுதியொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி எழுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் West Java province மேற்கு பண்டுங் West Bandung பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று (24) சனிக்கிழமை இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காணாமல்போயுள்ளவர்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மழையுடன்கூடிய வானிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஆச்சே Aceh […]

இந்தியா தமிழ்நாடு

விஜய்க்கு பா.ஜ.க. வலை: ஜனநாயகனை வைத்து வியூகம்?

  • January 24, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜயை பா.ஜ.க. BJP தலைமையிலான கூட்டணியில் இணைப்பதற்கு வலை வீசப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். “ஜனநாயகன்” திரைப்படத்தை முடக்கும் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஜனநாயகன்” படத்துக்கு பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். எனினும், இது விடயத்தில் அவர் மௌனித்து இருக்கிறார். எனவே, […]

ஐரோப்பா

ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் – ஸ்டாமர் வலியுறுத்து!

  • January 24, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய துருப்புக்கள் பணியாற்றிய விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோசமான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தன்னுடைய கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 9/11 க்குப் பிறகு கூட்டணியின் பரஸ்பர பாதுகாப்பு விதியைப் பயன்படுத்திய ஒரே உறுப்பினராக இருந்தபோதிலும், ட்ரம்ப் தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோதலின் போது நேட்டோ நட்புப் படைகள் “முன்னணியில் இருந்து சற்று விலகி இருந்தன” […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வேற்றுக்கிரகவாசிகள் பல கிரங்களில் இருக்கலாம் – ஆய்வாளர்கள் கருத்து!

  • January 24, 2026
  • 0 Comments

நாம் நினைத்ததை விட வேற்றுகிரகவாசிகளின் தாயகமாக இருக்கக்கூடிய பல கிரகங்கள் இருக்கலாம் என புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் “வாழக்கூடிய” அல்லது “கோல்டிலாக்ஸ்” (goldilocks)  மண்டலத்தில் உயிர்களைத் தேடி வருகின்றனர். ஒரு கிரகத்தை வாழத் தகுதியானதாக மாற்ற திரவ நீர் அவசியம் என்று நாங்கள் நம்புவதால், அந்த உலகங்கள் வேற்றுகிரகவாசிகளுக்கான நமது தேடலின் மையமாக உள்ளன. நாம் கண்டறிந்த பிற சூரிய மண்டலங்களில் உள்ள பல கிரகங்கள் அந்த அளவுகோல்களுக்குள் பொருந்தவில்லை. அதாவது அங்கு […]

இந்தியா

ராகுல்காந்திமீது அதிருப்தி: பா.ஜ.கவில் இணைவாரா சசி தரூர்?

  • January 24, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி Rahul Gandhiமீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் Shashi Tharoor கடும் அதிருப்தியில் உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பியான சசி தரூர், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் தேர்ச்சி பெற்றவர். இலங்கை உட்பட சர்வதேச அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டவர். ஒளிவு மறைவு இன்றி […]

இலங்கை செய்தி

அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம்: 78 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

  • January 24, 2026
  • 0 Comments

அரசியல் கட்சியாக பதிவுசெய்யுமாறுகோரி 2025 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட 83 விண்ணப்பங்களில் 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கத் தேவையான அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதே பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி […]

உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – 4000 விமான சேவைகள் பாதிப்பு!

  • January 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவை பாதித்துள்ள குளிர்கால புயல் காரணமாக சுமார் 4000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயல் நிலைமையானது நாளை வரை நீடிக்கும் எனவும்,  சில மாநிலங்களில்  வெப்பநிலையானது -45 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் தேசிய வானிலை சேவை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஓக்லஹோமா (Oklahoma), கன்சாஸ் (Kansas), கென்டக்கி ( Kentucky), வர்ஜீனியா (Virginia)மற்றும் மேற்கு வர்ஜீனியா (West Virginia)  மற்றும்  கிழக்கு கடற்கரை நகரங்கள் உட்பட பல மாநிலங்களில் ஒரு அடி வரை […]

பொழுதுபோக்கு

30 ஆம் திகதி திரைக்கு வருகிறாள் “க்ராணி”!

  • January 24, 2026
  • 0 Comments

” க்ராணி” Granny படம் எதிர்வரும் 30 ஆம் திகதி தரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படத்தில் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு வெளியான ‘பிரம்மா.காம்” படத்தை இயக்கிய விஜயகுமாரனே ‘க்ராணி’ படத்தையும் இயக்கியுள்ளார். சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ் மற்றும் ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை விஜயா […]

உலகம்

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல் ஒன்றை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா – இருவர் பலி!

  • January 24, 2026
  • 0 Comments

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் படகின் மீது அமெரிக்க இராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தெற்கு கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் தப்பித்துள்ளதாகவும், அவரை தேடும் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தப் பகுதியில் அமெரிக்கா நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குல் […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் அநுர ஆற்றிய உரை சரியானதே: சாணக்கியன் சான்று!

  • January 24, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஆதரிக்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் R. Shanakiyan தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் உரையை சிலர் திரிவுப்படுத்தி இனவாதமாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார். “யாழிலுள்ள நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை. வடக்கில் ஒரு விகாரையை […]

error: Content is protected !!