உலகம்

காசா பகுதியின் முக்கிய எல்லையை திறக்க நிபந்தனை விதித்த இஸ்ரேல்!

  • January 26, 2026
  • 0 Comments

எகிப்துடனான காசா பகுதியின் முக்கிய எல்லைக் கடவையை மீளவும் திறக்க இஸ்ரேல்  ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காசா பகுதியில் எஞ்சியிருக்கும் கடைசி இஸ்ரேலிய பணயக்கைதியின் உடலை மீட்கும் நடவடிக்கை முடிந்த பின்னரே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பணயக்கைதியான மாஸ்டர் சார்ஜென்ட் ரன் க்விலியின் (Master Sgt Ran Gvili) உடலைத் திருப்பி அனுப்ப ஹமாஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. இதற்கிடையே  காசாவின் வட […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருக்கு அஞ்சலி

  • January 26, 2026
  • 0 Comments

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வீரவணக்கம் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி […]

ஐரோப்பா செய்தி

இன ரீதியான கலவரங்களை ஊக்குவித்தாரா அமைச்சர் கோர்டன்?

  • January 26, 2026
  • 0 Comments

வடக்கு அயர்லாந்து ஸ்டோர்மாண்டின் (Stormont) அமைச்சர் கோர்டன் லியோன்ஸ் (Gordon Lyons), தரநிலை கண்காணிப்பு அமைப்பின் கண்டுபிடிப்புகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் நடத்தை விதிகளை அவர் மீறியதாக அந்த அமைப்பு தீர்மானித்தது. இனரீதியாக தூண்டப்பட்ட கலவரங்களின் போது, சில புலம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாதத்தில் லியோன்ஸ் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த பதிவு, கலவரங்களின் போது […]

இலங்கை

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 17 மில்லியனை கடந்தது!

  • January 26, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 17,252.15 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட அதிகமாகும் என்று இலங்கை சுங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி ஏற்றுமதி வருவாயானது ஆண்டுக்கு 5.6% வளர்ச்சியைப் பதிவு செய்ததாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) குறிப்பிட்டது. இதற்கிடையில், டிசம்பர் 2025 இல், பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,490.49 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.  […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து பாடசாலைகளில் “மொபைல் தடை” – அரசின் கடுமையான உத்தரவு

  • January 26, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson)தெரிவித்துள்ளார். பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். பாட நேரங்களில் மட்டுமின்றி இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி இல்லை என பிரிட்ஜெட் பிலிப்சன் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசிகளை கால்குலேட்டர் அல்லது பாடங்களுக்கான ஆராய்ச்சி கருவியாக பயன்படுத்துவதும் பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார். இனிவரும் காலங்களில் […]

உலகம்

நிபா வைரஸ் தொற்று : ஆசிய நாடுகளில் பயண பரிசோதனை தீவிரம்!

  • January 26, 2026
  • 0 Comments

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் சுகாதார கண்காணிப்பு மற்றும் பயண பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன. மேற்கு வங்காளத்தில் இருந்து வரும் பயணிகளை தாய்லாந்து அதிகாரிகள் முக்கிய விமான நிலையங்களில் பரிசோதித்தப்பின் நாட்டிற்குள் அனுமதிப்பதாக கூறப்படுகிறது. நேபாளம் அதன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான நில எல்லைகளில் சுகாதார மையங்களை அமைத்துள்ளது. தைவான் நிபா வைரஸை 5 ஆம் வகை அறிவிக்கத்தக்க நோயாக […]

இலங்கை செய்தி

NPP அரசுக்கு பொன்சேகா பாராட்டு: ஆதரவு வழங்கவும் பச்சைக்கொடி!

  • January 26, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதனை பாராட்ட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Sarath Fonseka தெரிவித்தார். “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்கு […]

உலகம்

கடும் பனிப்பொழிவு – நியூயார்க் (New York) நகரில் 05 பேர் உயிரிழப்பு!

  • January 26, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் (New York)  நகரில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று  அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர்கால புயல் அமெரிக்கா முழுவதும், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 880,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன. அத்துடன் டென்னசி, டெக்சாஸ், லூசியானா மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்களில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் 11,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,  12,000 விமானங்கள் தாமதடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் […]

இந்தியா

“இந்தியா உலகை பாதுகாப்பானதாக மாற்றுகிறது” – உர்சுலா வான் டெர் லேயன்!!

  • January 26, 2026
  • 0 Comments

இந்தியா” உலகை மேலும் “நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பானதாக” மாற்றுகிறது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வான் டெர் லேயன்  (Ursula von der Leyen) ,  குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். அவருடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் (Antonio Costa) சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில்  இந்த […]

இலங்கை

டயானா கமகேவின் வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

  • January 26, 2026
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் வசித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் டயானா கமகே மீது […]

error: Content is protected !!