இலங்கை

கணேமுல்ல கொலை வழக்கு – இரு குற்றவாளிகளுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

  • January 7, 2026
  • 0 Comments

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் முதன்மை சந்தேக நபரான இஷார செவ்வந்திக்கு உடந்தையாக இருந்ததாகவும், அவருக்கு தங்குமிடம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நந்தகுமார், தக்ஷி ஆகியோரை  விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும்  இன்று (07)  கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது  முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட […]

ஐரோப்பா

அமெரிக்காவின் பிடியில் ரஷ்ய எண்ணெய் கப்பல் – அதிகரிக்கும் பதற்றம்!

  • January 7, 2026
  • 0 Comments

வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடிப்போம் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் கப்பல் ஒன்று அப்பகுதியில் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகளால் துரத்தப்பட்டுள்ள மரைனேரா எண்ணெய் டேங்கர் கப்பலை அழைத்துச் செல்வதற்காக ரஷ்யாவின் பெல்லா 1 என்ற கப்பல் அந்த பகுதியில் பயணிப்பதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் வழக்கமாக வெனிசுலாவில் இருந்து ரஷ்யாவிற்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது குறித்த கப்பலானது ஸ்காட்லாந்துக்கும் ஐஸ்லாந்திற்கும் இடையில் இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை–ஜேர்மனி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுடன் இன்று புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. நிதி அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 188 மில்லியன் யூரோ பெறுமதியான கடனை மறுசீரமைப்பதற்கான ஆவணங்களில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜேர்மனி சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) ஆகியோர் கையெழுத்திட்டனர். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (OCC) இணக்கப்பாட்டைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள […]

இலங்கை செய்தி

இலங்கை இறப்பர் துறையை நவீனமயமாக்க ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கையின் இறப்பர் துறையை நவீனமயமாக்கி, பசுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 8 மில்லியன் யூரோ (சுமார் 2.5 பில்லியன் ரூபாய்) நிதியுதவியை வழங்கியுள்ளது. ‘அக்ரிகிரீன்’ (AgriGreen) என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் நிதி அமைச்சில் இன்று கையெழுத்திடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், குறிப்பாகப் பெண் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. சர்வதேசச் சந்தையில் இலங்கை இறப்பருக்கான கேள்வியை […]

இலங்கை

திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி!

  • January 7, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு பிறகு முதல் முறையாக இலங்கை நாணயத்திற்கு எதிரான டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி,  டொலர் ஒன்றின் பெறுமதி 310 ரூபாயாக  அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306  ரூபா 28  சதமாகவும், விற்பனை விலை 313 ரூபா 81  சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து! சட்டமூலம் முன்வைப்பு!

  • January 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவால் Harshana Nanayakkara மேற்படி சட்டமூலம் இன்று முன்வைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கி இருந்தது. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் முதலாவம் வாசிப்புக்கென இன்று முன்வைக்கப்பட்டது. மேற்படி சட்டமூலத்துக்கு எவரேனும் எதிர்ப்பெனில் உயர்நீதிமன்றத்தை நாடலாம். உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளியான பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும். அதேவேளை, […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ‘பேய் சிறை’ சர்ச்சை: £100 மில்லியன் வரிப்பணம் வீணாகும் அபாயம்

  • January 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் டார்ட்மூர் சிறைச்சாலையில் நிலவும் நச்சு வாயு அபாயம் தெரிந்திருந்தும், 10 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நீதியமைச்சின் முடிவினால் வரி செலுத்துவோரின் 100 மில்லியன் பவுண்டுகள் வீணடிக்கப்படவுள்ளதாகப் நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. அதிக கதிர்வீச்சு கொண்ட ரேடான் (Radon) வாயு கசிவு காரணமாக 2024-இல் மூடப்பட்ட இந்தச் சிறைக்கு, தற்போது ஒரு கைதி கூட இல்லாத நிலையில் ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் வாடகை மற்றும் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படுகிறது. 2033-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்திலிருந்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா முழுவதும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை

  • January 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பெரும்பகுதியை கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி வாட்டி வரும் நிலையில், நாடு முழுவதும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், ஆண்டின் முதல் புயலான ‘கோரெட்டி’ (Storm Goretti) நாளை வியாழக்கிழமை பிரித்தானியாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் வேல்ஸ் மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில் 5 முதல் 20 […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியாவில் கோரத் தாண்டவமாடும் காட்டுத்தீ: ‘உடனடியாக வெளியேறுங்கள்’ என மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • January 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள அப்பர் முர்ரே (Upper Murray) பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மவுண்ட் லாசன் (Mt Lawson) தேசியப் பூங்கா அருகே சுமார் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தத் தீ, தற்போது அதிவேகமாக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக பங்கில், கிரானியா மற்றும் தோலோகோலாங் பகுதி மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ‘விக் எமர்ஜென்சி’ (VicEmergency) […]

error: Content is protected !!