பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நட்சத்திரங்கள்!

  • January 30, 2026
  • 0 Comments

தமிழக அரசு 2014 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்திற்கான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய்​சேதுப​தி, கார்த்​தி, தனுஷ், ஆர்​.​பார்த்​திபன், சூர்​யா, ஆர்​யா, விக்​ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்​களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ், நயன்​தா​ரா, ஜோதி​கா, மஞ்​சு​வாரி​யர், அபர்​ணா​பால​முரளி, லிஜோமோல்​ஜோஸ், சாய்​பல்​லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாக​வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெரு​மாள், அசுரன், கூழாங்​கல், ஜெய்​பீம், கார்கி ஆகியவை சிறந்த திரைப்​படங்​களாக பட்டியலிடப்பட்டுள்ளன. கலைத்துறை சாதனையாளர்களுக்கு தங்கப் பதக்கங்கள், […]

இந்தியா

கருப்பு பெட்டி மீட்பு: விசாரணை தீவிரம்!

  • January 30, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. மேற்படி விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துணை முதல்வரின் இறுதிச்சடங்கு பூரண அரச மரியாதையுடன் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய மத்திய விமான போக்குவரத்து துறை உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதமும் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் மேற்படி கடிதத்துக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

Systems change நாசமாகிவிட்டது: சாடுகிறார் நாமல்!

  • January 30, 2026
  • 0 Comments

“Systems change” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பியுள்ளனர். தமது இயலாமையை மூடிமறைக்கவே எம்மை இலக்கு வைக்கின்றனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். நானும், எமது கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தோம். இது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இறுதியானது அல்ல, இன்னும் பல நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் செல்லவுள்ளேன். மக்களுக்கு வழங்கிய […]

ஐரோப்பா

இங்கிலாந்திற்கு ஆபத்து : ஸ்டாமரின் சீன விஜயத்தை தொடர்ந்து ட்ரம்ப் எச்சரிக்கை!

  • January 30, 2026
  • 0 Comments

பிரித்தானியா மற்றும் சீனாவிற்கு இடையில் இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவை எச்சரித்துள்ளார். போட்டி வல்லரசுடன் இங்கிலாந்து நெருக்கமான உறவுகளைத் தொடர்வது “மிகவும் ஆபத்தானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்டு ஆண்டுகளில் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்த முதல் பிரித்தானிய பிரதமரான ஸ்டாமர் விசா முதல் மேம்பட்ட சந்தை அணுகல் வரை ஏறக்குறைய 13 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளார். இருப்பினும் வொஷிங்டனுடன் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஸ்டார்மரின் முயற்சிகள் பின்னடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க […]

ஐரோப்பா

ஹாரி சூறாவளி எதிரொலி – மத்தியத் தரைக்கடலில் 380 பேர் மாயமாகியிருக்கலாம்!

  • January 30, 2026
  • 0 Comments

கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய  ஹாரி சூறாவளி  காரணமாக மத்தியத் தரைக்கடலில் பயணித்த சுமார் 380 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. துனிசியாவில் இருந்து புறப்பட்ட 380 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர். துனிசிய துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் (Sfax) இருந்து ஆட்கடத்தல்காரர்களால் இயக்கப்பட்ட சுமார் 08 படகுகளை அதிகாரிகள் தேடி வருவதாகவும் அறிவித்துள்ளனர். இதேவேளை மால்டாவில்  கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு […]

ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஜனாதிபதிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese அழைப்பு விடுத்தது தவறான முடிவாகும் என ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காசா பகுதியில் தொடரும் போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த இராஜதந்திர அணுகுமுறை தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்ரேல் […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்!

  • January 30, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (IRS) மற்றும் கருவூலத் துறைக்கு எதிராக நேற்று வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது முதல் பதவிக் காலத்தில் தனது வரி வருமானம் சட்டவிரோதமாக ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டதாகக் கூறியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம் அவர் 10  பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது டொனால்ட் ட்ரம்ப் தனது மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் […]

உலகம்

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் : துருக்கியின் உதவியை நாடும் தெஹ்ரான்!

  • January 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து,  ஈரானின்  வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi), இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அங்காராவிற்கு (Ankara) பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாலும், மோதலைத் தவிர்க்க தெஹ்ரான் வலிமிகுந்த சமரசங்களைச் செய்வதாலும் துருக்கி அவசர மத்தியஸ்தத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan), டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது ஈரானிய பிரதிநிதி மசூத் பெஷேஷ்கியனுக்கும் (Masoud Pezeshkian) இடையே ஒரு வீடியோ […]

உலகம்

கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

  • January 30, 2026
  • 0 Comments

கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். தேசிய அவசரகால அறிவிப்பின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை கியூபாவிற்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது. எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை அல்லது அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளக்கூடிய தயாரிப்புகள் உள்ள எந்த நாடுகளையும் தனிமைப்படுத்தவில்லை. வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ட்ரம்ப் கியூபாவை ஒப்பந்தம் ஒன்றை எட்ட நிர்பந்தித்தார். இதுவரை ஒப்பந்தம் ஒன்று எட்டப்படாத நிலையில், மேற்படி […]

விளையாட்டு

பதிலடி கொடுக்குமா இலங்கை?

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T – 20 கிரிக்கெட் போட்டி இன்று (30) நடைபெறுகின்றது. கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallegala International Cricket Stadium இலங்கை நேரப்படி இன்றிரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இதற்கு முன் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் ODI கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. அந்த வெற்றியின் ஊக்கத்துடன் இங்கிலாந்து அணி டி20 தொடரிலும் முன்னிலை பெறும் […]

error: Content is protected !!