ஐரோப்பா

கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் புகுந்த கார் : நெதர்லாந்தில் அதிர்ச்சி!

  • December 23, 2025
  • 0 Comments

நெதர்லாந்தில் அணிவகுப்பொன்றை பார்வையிட காத்திருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே கார் ஒன்று  புகுந்ததில் 09 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து (Amsterdam) கிழக்கே 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள நன்ஸ்பீட் (Nunspeet) என்ற நகரத்தில்,  கிறிஸ்துமஸ் அணிவகுப்பை காண காத்திருந்த மக்கள் கூட்டத்திலேயே  கார் மோதிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் உடனடியாக வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்று கெல்டர்லேண்ட் (Gelderland) காவல்துறை […]

உலகம்

மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான விமானம் விபத்து – 05 பேர் உயிரிழப்பு!

  • December 23, 2025
  • 0 Comments

டெக்சாஸின் (Texas) கால்வெஸ்டன் (Galveston) கடற்கரையில் மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான ஒரு சிறிய விமானம் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் எட்டு பேர் பயணித்த நிலையில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானம் “சிறப்பு மருத்துவ போக்குவரத்தை மையமாகக் கொண்ட மனிதாபிமான பணியை” மேற்கொண்டு வந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பிலான காரணம் கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் காத்திருக்கும் ஆபத்து: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, மிக முக்கிய செய்தியொன்று வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் பாதீடு நேற்று (22) தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “ இலங்கையிலுள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபைதான் பிரதானமானது. அதில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அரசாங்கம் […]

உலகம் செய்தி

கிரீன்லாந்தை அடைய துடிக்கும் ட்ரம்ப் – கைக்கொடுக்கும் புதிய தூதர்!

  • December 23, 2025
  • 0 Comments

கிரீன்லாந்திற்கு சிறப்பு தூதர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன்  இணைக்க விரும்புவதாக கூறி ட்ரம்ப் மீளவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். லூசியானாவின் குடியரசுக் கட்சி ஆளுநரான ஜெஃப் லாண்ட்ரியின் புதிய பங்கு குறித்து பிபிசி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு” கிரீன்லாந்து தேவை என்றும் “நாம் அதைப் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். டென்மார்க் இராச்சியத்தின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்திற்கான சிறப்புத் தூதராக லாண்ட்ரி “பொறுப்பை வழிநடத்துவார்” எனவும் அவர் […]

இலங்கை

தங்கத்தின் விலை 7000 ரூபாயால் அதிகரிப்பு!

  • December 23, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய  நிலவரப்படி, உலக அளவில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,485 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கையில், நேற்றைய (22)  விலையுடன்  ஒப்பிடும்போது தங்கத்தின் விலை  7,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று காலை, கொழும்பு புறக்கோட்டை தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 325,600 ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், நேற்று   344,000 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் […]

அரசியல் இந்தியா செய்தி

இலங்கையை மீளக்கட்யெழுப்ப 450 மில்லியன் டொலர்களை வழங்குகிறது இந்தியா!

  • December 23, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய நிதி உதவி திட்டத்தை இந்தியா இன்று (23) அறிவித்துள்ளது. இதற்கமைய 450 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 350 மில்லியன் டொலர் சலுகை கடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று (22) மாலை இலங்கை வந்தடைந்தார். இன்று (23) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் இனி எங்கள் ஆட்சி: கூட்டு எதிரணி அறிவிப்பு

  • December 23, 2025
  • 0 Comments

“ கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணியே இனி செல்வாக்கு செலுத்தும். நாமே கொழும்பை ஆள்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபை […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் தயாசிறி!

  • December 23, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர். இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய சட்டம்: நீதி அமைச்சு கூறுவது என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு நகல் தொடர்பில் மக்களின் கருத்துகளை பெற்ற பின்னரே சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி சட்டவரைவு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. தனிநபர்களும், அமைப்புகளும் எதிர்வரும் பெப்ரவரி 28 […]

அரசியல் இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் நடப்பது வேறு: மஹிந்த அணி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக எழுந்து நிற்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “யாழ்ப்பாணத்தில் இராணுவ வசம் இருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுவிட்டது. எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களை பரப்ப முற்படக்கூடாது. சிங்கள, பௌத்த மக்கள் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக போராட்டம் […]

error: Content is protected !!