ஆஸ்திரேலியா உலகம் ஐரோப்பா செய்தி

ஜெட்ஸ்டார் விமானத்தில் தட்டம்மை தொற்று: மேற்கு அவுஸ்திரேலியாவில் அவசர எச்சரிக்கை

  • December 26, 2025
  • 0 Comments

பாலியிலிருந்து பெர்த்திற்கு வந்த ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேற்கு அவுஸ்திரேலியாவில் அவசர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 20-ஆம் திகதி குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்தவர்கள், அடுத்த 18 நாட்களுக்குத் தங்களைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், இருமல், கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக முகக்கவசம் அணிந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கோரியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் […]

உலகம் செய்தி

ஜப்பானில் ரப்பர் தொழிற்சாலையில் கத்தி குத்து தாக்குதல் – பலர் படுகாயம்!

  • December 26, 2025
  • 0 Comments

ஜப்பானில் இன்று இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஏறக்குறைய 15 பேர் காயமடைந்திருக்கலாம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிஷிமா (Mishima) நகரில் உள்ள யோகோகாமா (Yokohama) ரப்பர் தொழிற்சாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் அவசர சேவைளுக்கு 05 பேர் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 30 வயதுடைய தாக்குதல்தாரி குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. பாதுகாப்பு காரணங்களை […]

ஐரோப்பா

UKவில் அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள் – விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை!

  • December 26, 2025
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் இடம்பெறும் கார் திருட்டை சமாளிப்பதற்காக பிரத்தியேக காவல்துறை பிரிவை நிறுவ வேண்டும் என்ற அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய   முக்கால்வாசிக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, 2024-25 நிதியாண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 121,825 மோட்டார் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் 92,958 விசாரணைகளில் ஒன்றுக்கூட நிறைவுப் பெறாமல் மூடப்பட்டதாக […]

இலங்கை செய்தி

பதுளையில் ‘ஒரு மில்லியன் தன்னார்வலர்கள்’ திட்டம்: 1000 இளைஞர்கள் களத்தில்

  • December 26, 2025
  • 0 Comments

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒரு மில்லியன் தன்னார்வலர்கள் (One Million Volunteers) வேலைத்திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் பிரம்மாண்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சுமார் 1000 தன்னார்வ இளைஞர்கள் பங்கேற்கும் இத்திட்டத்தின் மூலம், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைத்தல், வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகமும் இடம்பெறவுள்ளன. இன்று […]

உலகம் செய்தி

சிரியாவின் ஹோம்ஸ் மசூதியில் குண்டுவெடிப்பு – அறுவர் பலி

  • December 26, 2025
  • 0 Comments

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியொன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, ஹோம்ஸ் நகரின் வாடி அல்-தஹாப் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதி மீது இந்த தாக்குதல் நடந்ததாக சிரிய அரசுச் செய்தி நிறுவனம் (SANA) தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தை பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வெடிப்பு தற்கொலை […]

உலகம்

05 ஆண்டுகால போராட்டம் : ஒருவழியாக உரும்கி-யூலி (Urumqi-Yuli) விரைவுச் சாலையை திறந்த சீனா!

  • December 26, 2025
  • 0 Comments

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள G0711 உரும்கி-யூலி  (Urumqi-Yuli) விரைவுச் சாலை இன்று (26) திறக்கப்பட்டது. இந்த விரைவுச் சாலை 324.7 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் இருவழி, நான்குவழி விரைவுச் சாலையின் தரத்தின்படி கட்டப்பட்டுள்ளது. உரும்கி-யூலி (Urumqi-Yuli) விரைவுச் சாலையின் முக்கிய பாதையில் 12 மேம்பாடுகள், 17 சுரங்கப்பாதைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பாலங்கள் மற்றும் மதகுகள் உள்ளன. அவற்றில், ‘தியான்ஷான்-ஷெங்லி’ (‘Tianshan-Shengli) சுரங்கப்பாதைத் திட்டம் […]

#Putin #RussiaUkraineWar #DroneAttack #Zelenskyy #Russia #Ukraine #WorldNews #BreakingNews #PeaceTalks2025 #Valdai உலகம் செய்தி

ரஷ்யா, உக்ரைன் போர் – அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தெரிவதாக செலென்ஸ்கி அறிவிப்பு

  • December 26, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து நம்பிக்கை வெளியிட்டார். அமெரிக்காவின் ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் ஜேரட் குஷ்னர் ஆகியோருடன் நடந்த ஒரு மணி நேர தொலைபேசி உரையாடல் “அமைதியை விரைவில் கொண்டுவர புதிய யோசனைகளை வழங்கியது” என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் இணைந்து 20 அம்சங்களைக் கொண்ட புதிய அமைதி திட்டத்தை தயாரித்துள்ளன. இந்த திட்டத்தில், கிழக்கு உக்ரைனில் சில […]

கருத்து & பகுப்பாய்வு

அழிவின் விளிம்பில் உலகம்? அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்!

  • December 26, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றன. பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளை  சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதற்கமைய   மூன்றாம் உலகப் போர் தொடர்பான கணிப்புக்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ரஷ்யா –  அமெரிக்காவிற்கு இடையில் மோதல்கள் எழக்கூடும் எனவும், சீனா – தைவான் விவகாரம் இந்த போருக்கு அடித்தளம் இடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பா.ம.க-விலிருந்து ஜி.கே.மணி அதிரடி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் உத்தரவு

  • December 26, 2025
  • 0 Comments

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஜி.கே.மணிக்கு கடந்த 18-ஆம் தேதி பா.ம.க ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கான விளக்கத்தை அளிக்க வழங்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று முதல் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் 31 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • December 26, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (budget) எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு […]

error: Content is protected !!