இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் கல்லூரி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர்

  • December 26, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தில்(Uttar Pradesh) உள்ள கோரக்பூர்(Gorakhpur) கூட்டுறவு இன்டர் கல்லூரியில் பட்டப்பகலில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் பிப்ராய்ச்(Bibraich) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கர்வா(Karwa) கிராமத்தில் வசிக்கும் சுதிர் பாரதி(Sudhir Bharti) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேரில் கண்ட சாட்சிகளின்படி, சுதிர் தனது நண்பர்களுடன் கல்லூரி மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது, ​​மூன்று மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சுதிர் மூன்று […]

இலங்கை செய்தி

பூஸா சிறைச்சாலையில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுப்பு

  • December 26, 2025
  • 0 Comments

கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அண்மையில்  லொக்கு பெட்டி, மிதிகம ருவன் மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களுக்குள் இருந்தும் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில தொலைபேசிகள் சிறைக்கூடங்களின் தரையினுள் புதைக்கப்பட்ட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தவாறே கையடக்கத் தொலைபேசி ஊடாக குற்றச் செயல்களை இவர்கள் வழிநடத்தி வருகின்றமை […]

உலகம் செய்தி

தொழுகை நடத்திக்கொண்டிருந்த பாலஸ்தீன நபர் மீது வாகனத்தை மோதிய இஸ்ரேலிய சிப்பாய்

  • December 26, 2025
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சாலையோரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பாலஸ்தீன(Palestine) நபர் மீது துப்பாக்கியுடன் கூடிய இஸ்ரேலிய(Israel) சிப்பாய் ஒருவர் வாகனத்தை மோதியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. “ஒரு பாலஸ்தீனிய நபர் மீது ஆயுதமேந்திய நபர் ஒருவர் மோதிய காட்சிகள் கிடைத்தன, அந்த நபர் ஒரு ரிசர்வ் சிப்பாய்(reserve soldier) என்றும் அவரது இராணுவ சேவை நிறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் சிப்பாய் என்பவர் ஒரு பகுதிநேர இராணுவ உறுப்பினர் ஆவார், ஆனால் தேசிய அவசரநிலைகள் அல்லது […]

அரசியல் இந்தியா செய்தி

கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் மோடி, நட்டா பங்கேற்பு – கிறிஸ்தவ வாக்காளர்களை கவர பாஜக முயற்சி?

  • December 26, 2025
  • 0 Comments

கிறிஸ்துமஸ் தினத்தன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதன் மூலம், கிறிஸ்தவ சமூகத்தை கவர பாஜக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் கிறிஸ்தவ வாக்காளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இதனால், வரவிருக்கும் தேர்தல்களை கருத்திற்கொண்டு, பாஜக கிறிஸ்தவ சமூகத்துடன் நெருக்கம் ஏற்படுத்த […]

இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சிந்தூர் நடவடிக்கையின் போது வீரர்களுக்கு உணவு வழங்கிய 10 வயது சிறுவனுக்கு விருது

  • December 26, 2025
  • 0 Comments

ஜம்மு காஷ்மீரின்(Jammu and Kashmir) பஹல்காம்(Pahalgam) நகரில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பாகிஸ்தான்(Pakistan) திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் பொது மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, மே 7ம் திகதி ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த சிந்தூர் நடவடிக்கையின் போது போர் தொடர்பான ஆபத்துகளுக்கு மத்தியில் பஞ்சாபின்(Punjab) ஃபெரோஸ்பூர்(Ferozepur) எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களுக்கு தண்ணீர், பால் மற்றும் […]

உலகம் செய்தி

ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே நாளை புளோரிடாவில் சந்திப்பு

  • December 26, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி  வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். இதன்போது, அமெரிக்கா முன்வைத்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் மற்றும் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகர், அமெரிக்க அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறும் […]

பொழுதுபோக்கு

ஜனநாயகன் ‘செல்ல மகளே’ பாடல் ரிலீஸ்: தந்தை – மகள் பாசத்தில் நெகிழ வைத்த விஜய்!

  • December 26, 2025
  • 0 Comments

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே “தளபதி கச்சேரி”, “ஒரு பேரா வரலாறு” ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தற்போது தந்தை-மகள் பாசத்தை உணர்த்தும் “செல்ல மகளே” பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய் அவரே பாடியுள்ளார். “கேட்காமலே உனக்கு தர உயிர் இருக்கு… செல்ல மகளே” என அவர் பாடும் வரிகள் கேட்பவர்களை உருக வைக்கிறது. மேலும் […]

இந்தியா செய்தி

360-டிகிரி தாக்குதல் – ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் புதிய திட்டம்

  • December 26, 2025
  • 0 Comments

விரைவில் இந்தியா “360-டிகிரி தாக்குதல் திட்டம்” மூலம் ஒழுங்குசெய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2025 பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பஹால்காம் நகரில் ஏப்ரல் 22 ஆம் திகதி  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக பதிலடி கொடுத்துள்ளன. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – முதல் நாளிலேயே 20 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா

  • December 26, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே(Boxing Day) டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. ஆஸ்திரேலிய […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வேலை விசாவில் UKவிற்கு வருகை தருபவர்கள் தஞ்சம் கோருவது அதிகரிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிட விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஆண்டில் (2024)  வேலை விசாவில் வருகை தந்த 13000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தஞ்சம் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வேலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தருபவர்கள் பின்பு தஞ்சம் கோருவது கடுமையாக அதிகரித்து வருவதாக உள்துறை அலுவலகத்தின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வேலை விசாவில் பிரித்தானியாவிற்கு வருகை தந்த 13427 பேர் தஞ்சம் கோரியுள்ளனர். இது முந்தைய ஆண்டில்(2023)  9392 காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜுலை […]

error: Content is protected !!