உலகம் செய்தி

48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த பணவீக்கம் – ட்ரம்ப் கருத்து!

  • December 18, 2025
  • 0 Comments

தான் பதவியேற்றபோது நாட்டின் பணவீக்கம் 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது மளிகைப் பொருட்களுக்கான விலை குறைவடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 1.45 மில்லியனுக்கும் அதிகமான இராணுவ சேவை உறுப்பினர்களுக்கு “போர்வீரர் ஈவுத்தொகையாக  $1,176 டொலர் வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளார். குறித்த பணம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சராசரி […]

உலகம்

டிரம்ப் – கிம் சந்திப்பு ; 2026இல் நடக்க அதிக வாய்ப்பு

  • December 18, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த ஆண்டு நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது கிம்முக்கும் டிரம்புக்கும் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அச்சந்திப்பு சீனாவில் நடைபெற வாய்ப்புகள் இல்லை என்றும் கடந்த முறை போன்று வடகொரிய, தென்கொரிய […]

இலங்கை

”இலங்கைக்கு வாருங்கள்” – வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் சங்கக்கார வேண்டுகோள் 

  • December 18, 2025
  • 0 Comments

டித்வா சுறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய உந்து சக்தியாக இலங்கைக்கு உள்ளது. இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்கு வர வேண்டும். அனைவருக்கும் இலங்கை திறந்திருக்கும். இலங்கை பாதுகாப்பானது. உங்களை வரவேற்றக நாடு தயாராகவுள்ளது. உங்கள் வருகை இலங்கையின் வளர்ச்சிக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இந்த அறிவிப்பை விடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவி உள்ளிட்ட விடயங்களுக்காக அவசர நிதியாக 500 பில்லியன் ரூபா கோரும் குறைநிரப்பு பிரேரணை சபையில் இன்று முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே அதற்கு ஆதரவளிக்கப்படும் என சஜித் கூறினார். அத்துடன், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள […]

அரசியல் இலங்கை செய்தி

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு: அடுத்து என்ன?

  • December 18, 2025
  • 0 Comments

500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போதே டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பட்டு, அக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது. குறைநிரப்பு பிரேரணைமீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக எதிரணிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயலிலும் “அரசியல்”?

  • December 18, 2025
  • 0 Comments

அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேரிடரில் இருந்து மீள்வதும், நாட்டை கட்டியெழுப்புவதுமே தற்போது முதன்மை நோக்கமாக உள்ளது எனவும் அவர் கூறினார். அனர்த்தத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும், நிவாரண பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையிலேயே அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ அனர்த்த நெருக்கடியின்போது அரச ஊழியர் வழங்கிய சேவை போற்றத்தக்கது. நிவாரண பணிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி விலக தயார்: ரணில் அறிவிப்பு! ஐதேக தலைமைப் பதவியை ஏற்பாரா சஜித்?

  • December 18, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்கு தான் தான் தடையென கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தாரென சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. எனினும், […]

ஐரோப்பா செய்தி

6000 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டாலும், உயிருடன் வாழ்ந்த இளைஞர்!

  • December 18, 2025
  • 0 Comments

6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த   இளைஞர் ஒருவர்  சிங்கத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டபோதும் பல மாதங்கள் உயிருடன் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். பல்கேரியாவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது தொடர்புடைய எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த இளைஞரின்  மண்டை ஓட்டில் பல கடித்த அடையாளங்கள் உள்ளதாகவும், அவை சிங்கத்தின் பல்லிலிருந்து வந்தவை என்பது தெளிவாக புலப்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக சிங்கத்தின் தாக்குதலால் அவரின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், தாக்குதலுக்கு பிறகு  குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை உயிர் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

2026 ஆம் ஆண்டில் உச்சம் தொடும் வெப்பநிலை : ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

  • December 18, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய அளவை விட அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெப்பநிலையானது 1.46C ஆக இருக்கும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது. இது 1850-1900 காலப்பகுதியில் இருந்ததை விட  தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு முன்பு உலக வெப்பநிலையானது 1.3C ஆகக் காணப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டில் 1.4C ஆகக் காணப்படும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கடந்த 2024 ஆம் ஆண்டு […]

இந்தியா செய்தி

டெல்லியில் சில வாகனங்கள் உட்பிரவேசிக்க தடை!

  • December 18, 2025
  • 0 Comments

டெல்லியில் காற்றின் தரநிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உமிழ்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்காத வாகனங்கள் மீது தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய பழைய டீசல் லொறிகள் நகரத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நகரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் 50% வருகையுடன் இயங்கும் என அமைச்சர் கபில் மிஸ்ரா (Kapil Mishra) அறிவித்துள்ளார்.  ஏனையவர்கள் வீட்டில் இருந்தே பணிப்புரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை காரணமாக  […]

error: Content is protected !!