புயலுக்கு பின் இலங்கையை கட்டியெழுப்புவதில் பாரிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா!
இலங்கையை உலுக்கிய டித்வா சூறாவளியினால் சுமார் 04.1 பில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில் புயலுக்கு பிந்தைய மறுகட்டமைப்பு முயற்சிகளில் இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும் முக்கிய பங்கு வகிப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் இருநாட்டு தலைவர்களும் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இந்த விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். […]













