அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செயற்கை நுண்ணறிவுக்கான (AI) கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய சீனா!

  • December 30, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI)க்கான கடுமையான புதிய விதிகளை சீனா முன்மொழிந்துள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்புகளை வழங்கவும், சுய-தீங்கு அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் ஆலோசனைகளை சாட்போட்கள் வழங்குவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் கீழ், டெவலப்பர்கள் (developers) தங்கள் AI மாதிரிகள் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சீனாவிலும் உலகெங்கிலும்  சாட்போட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதற்கமைய AI […]

இலங்கை

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொடர் போராட்டம்!

  • December 30, 2025
  • 0 Comments

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. போராட்டக்காரர்கள்,  மணல் நிறுவனத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை விரட்டுங்கள் , தனியாருக்கு விற்க வேண்டாம், குறைந்த விலையில் மண் விற்பதை உடனடியாக நிறுத்தி எங்கள் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யாமல் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தொழிற்சங்கங்கள் ஊடாக பல கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அதற்குப் பதிலாக அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். […]

உலகம்

காசா அமைதி திட்டம் – ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் : எச்சரிக்கும் ட்ரம்ப்!

  • December 30, 2025
  • 0 Comments

காசாவில் அமைதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் நேற்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் மேற்படி அறிவித்துள்ளார். இதன்போது அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ​​காசாவில் அதன் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் நேசக்கரம்!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் Communist Party of China (CPC) நிவாரணம் வழங்கவுள்ளது. இதற்கமைய சீன நாணய மதிப்பில் ஒரு மில்லியன் பெறுமதியான RMB 1 million நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீன தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் மேற்படி தகவல் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அண்மையில் இலங்கை வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பிக்கும், சீன கம்யூனிஸ் […]

இலங்கை

இலங்கைக்கு வருகை தரும் IMF குழு : EFF இன் ஐந்தாவது மதிப்பாய்வு தொடர்பில் கலந்துரையாட திட்டம்!

  • December 30, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து விவாதிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். EFF இன் ஐந்தாவது மதிப்பாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது, மேலும் அதை அங்கீகரிக்க IMF நிர்வாகக் குழு முதலில் டிசம்பர் 15 அன்று கூட திட்டமிடப்பட்டது. இருப்பினும், விரைவான நிதியுதவிக்கான இலங்கையின் கோரிக்கையைத் தொடர்ந்து கூட்டத்தை ஒத்திவைக்க IMF முடிவு […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சி கவிழுமா? பிரதி அமைச்சர் பதிலடி!

  • December 30, 2025
  • 0 Comments

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திட்டவட்டமாக அறிவித்தார். அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் கவிழும் எனவும் எதிரணிகள் கருத்து வெளியிட்டுவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு […]

உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூடு – தாக்குதல்தாரிகள் பிலிப்பைன்ஸ் சென்றதன் நோக்கம் என்ன?

  • December 30, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் சென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தாக்குதல்தாரிகள் பயணித்த சிசிரிவி காட்சிகளை ஆஸ்திரேலிய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த காணொளிகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆரம்ப மதிப்பீடுகள்  தாக்குதல்தாரிகள் இருவரும்  தனியாக செயல்படுவதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பரந்த பயங்கரவாதக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் அல்லது தாக்குதலை நடத்துவதற்கு மற்றவர்களால் வழிநடத்தப்பட்டவர்கள் என்று கூறுவதற்கு எந்த […]

இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச […]

உலகம்

தைவானை சுற்றி விரிவான இராணுவ பயிற்சிகளை முன்னெடுக்கும் சீனா!

  • December 30, 2025
  • 0 Comments

சீன மக்கள் விடுதலைப் படையின் கிழக்குப் போர் மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றி இராணுவ பயிற்சிகளை  ஆரம்பித்துள்ளது. “ஜஸ்டிஸ் மிஷன் 2025” என்று பெயரிடப்பட்ட இந்த இராணுவ பயிற்சி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் காலாட்படை, கடற்படை, விமானப்படை மற்றும் ரொக்கெட் படைகள் தைவான் தீவு, தைவான் ஜலசந்தியின் வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. போர் பயிற்சியின் போது, ​​கடல்-வான் […]

அரசியல் இலங்கை செய்தி

“கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை”

  • December 30, 2025
  • 0 Comments

கணக்காய்வாளர் நாயகம் Auditor General இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்நாட்டில் ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. (JVP. அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நியமனம் இழுபறியில் இருப்பது வேதனையளிக்கின்றது. கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் […]

error: Content is protected !!