அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: கொழும்பை பரபரப்பாக்கியுள்ள “அரசியல் சந்திப்பு”

  • December 30, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அறியமுடிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் இன்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராகவும் பதவி […]

உலகம் செய்தி

சிவப்பு கோட்டை தாண்டிய இஸ்ரேல் – எச்சரிக்கை விடுத்த ஹவுத்திகள்!

  • December 30, 2025
  • 0 Comments

இஸ்ரேல் சோமாலிலாந்தை (Somaliland) தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில்,  ஹவுத்தி போராளிக் குழுவினர் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் சிவப்பு கோட்டை தாண்டியுள்ளதாக ஹவுத்தி தலைவர் அப்தெல்-மாலிக் அல்-ஹவுத்தி (Abdel-Malik al-Houthi) குறிப்பிட்டுள்ளார். “சோமாலிலாந்தில் எந்தவொரு இஸ்ரேலிய இருப்பும் எங்கள் ஆயுதப் படைகளுக்கு இராணுவ இலக்காக நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் அது சோமாலியா மற்றும் ஏமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும், பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் முடிவு பரந்த பிராந்திய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் செயலால் சோமாலியா முழுவதும் வெடித்த போராட்டங்கள்

  • December 30, 2025
  • 0 Comments

சோமாலிலாந்தை இஸ்ரேல் உலகளவில் முதன்முறையாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, சோமாலியா முழுவதும் பரவலான போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் மொகடிஷு (Mogadishu) உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மொகடிஷுவின் முக்கிய கால்பந்து மைதானம் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை,மக்கள் திரண்டனர். போராட்டக்காரர்கள் சோமாலிய கொடிகளை ஏந்தியும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பினர். பைடோவா, துசமரெப், லாஸ் அனோட், ஹோபியோ உள்ளிட்ட நகரங்களிலும், நாட்டின் வடகிழக்கு […]

இந்தியா உலகம் செய்தி

புடினின் இல்லம் மீதான தாக்குதல் சர்ச்சை – மோடியும் கவலை

  • December 30, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக முயற்சிகளை தொடருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைய தற்போதைய தூதரக முயற்சிகளே மிகவும் சாத்தியமான வழி என்றும் தொடர்புடைய அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும் […]

உலகம் செய்தி

மீண்டும் ஒரு சுகாதார நெருக்கடி – 61 நாடுகளில் பரவி வரும் நோய் தொற்று!

  • December 30, 2025
  • 0 Comments

மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான பூஞ்சையான கேண்டிடா ஆரிஸ் (Candida auris), உலகம் முழுவதும் வீரியம் பெற்று பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் பூஞ்சை தொற்றுகளால்  50 சதவீதமானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேண்டிடா ஆரிஸ்  (Candida auris),  என்பது ஒரு வகை ஊடுருவும் பூஞ்சை தொற்று ஆகும். குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தும். இது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு […]

இலங்கை செய்தி

வசூலில் சாதனை படைத்த சுங்கத் திணைக்களம்: ஜனாதிபதி பாராட்டு!

  • December 30, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் 2025 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கான 2,115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் பெறப்பட்டுள்ளது. இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சட்டக் குழுவை அமைத்தது சஜித் அணி!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அரசாங்கத்தால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு […]

இலங்கை

டக்ளஸ் தேவானந்தா மருத்துவமனையில் அனுமதி!

  • December 30, 2025
  • 0 Comments

சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து  மருத்துவர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி தொடர்பான சம்பவம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கடந்த 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

  • December 30, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலில் தற்காலிக தொழில்களில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் ஊழியச் சந்தையில் தற்காலிக தொழில்களில் அமர்த்துவதற்கு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 பெப்ரவரி 05 […]

ஐரோப்பா

புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம் – துருக்கியில் திடீர் சோதனை : பலர் கைது!

  • December 30, 2025
  • 0 Comments

இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராக இன்று துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் காவல்துறையினர் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தி 357 சந்தேக நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா (Ali Yerlikaya) தெரிவித்துள்ளார். துருக்கியின் வடமேற்கு மாகாணமான யலோவாவில் (Yalova) 06 ஐஎஸ் போராளிகள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறைவிடமாக செயற்பட்ட வீடொன்று  சுற்றிவளைக்கப்பட்டதாகவும்,  இதன்போது 08 அதிகாரிகள் […]

error: Content is protected !!