மலேசியாவில் 12வயது சிறுமியை சுத்தியால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது
ஜோகூர் பாருவில் 12 வயதுச் சிறுமியை இரும்புச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.முன்னதாக, தலையில் காயமடைந்த சிறுமி ரத்தம் சிந்தக் காணப்படும் காணொளி ஃபேஸ்புக்கில் பரவியது.அதையடுத்து மலேசியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. தாமான் உங்கு துன் அமினா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜூலை 26ஆம் தேதி அச்சிறுமி தாக்கப்பட்டதாகக் காவல்துறையின் ஜோகூர் பாரு வடக்குப் பிரிவுத் தலைவர் பல்வீர் சிங் கூறினார். சம்பவ நாளன்று மாலை அதுகுறித்துப் புகாரளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.விசாரணையைத் […]













