பிரான்ஸ் – பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த வீரர் மாயம்!
பிரான்ஸில் பராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்க இருந்த ஒருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்டிங் வாலிபால் போட்டியில் ருவாண்டா அணிக்காக விளையாட இருந்து தடகள வீரர் ஒருவரே இவ்வாறு மாயமானதாக கூறப்படுகிறது. இருப்பினும், பிரான்சில் உள்ள செய்திகளின்படி, அவர் ஆகஸ்ட் 20 ஆம் திகதி பிரான்சின் தலைநகருக்கு வந்தபோது இருந்து மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை தேடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.













