செய்தி வட அமெரிக்கா

உலக அளவில் வெப்ப வாயுக்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் கனடா

  • August 30, 2024
  • 0 Comments

உலக அளவில் வெப்ப வாயுக்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் கனடா கடந்த ஆண்டு நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு காட்டுதீச் சம்பங்கள் ஏற்பட்டது அதற்குக் காரணமாகும். காட்டுதீச் சம்பங்களால் கனடாவில் மொத்தம் 15 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு நிலம் அழிந்துபோனது. 200,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேறினர். கனடாவில் சென்ற மே மாத்திற்கும் செப்டம்பருக்கும் இடையில் 2,300 மெகாடன் கரியமில வாயு வெளியேற்றப்பட்டது. மிக அதிகமாக வெப்ப வாயுக்களை வெளியேற்றிய நாடுகளில் […]

ஆசியா

தென் கொரியாவில் திடீரென ஏற்பட்ட விபரீதம் – காரை விழுங்கிய பாதாளக் குழி

  • August 30, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் உள்ள வீதி ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட பாதாளக் குழிக்குள் கார் விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். தென் கொரியாவின் தலைநகர் சோலின் சியோதேமுன் வட்டாரத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது அது பக்கவாட்டில் உருண்டு குழிக்குள் விழுந்துள்ளது. காயமுற்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 80 வயது மதிக்கத்தக்க நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதாளக் குழியால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதேவேளை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திடீரென்று ஏற்பட்ட பாதாளக் குழிக்குள் இந்தியச் சுற்றுப்பயணி ஒருவர் விழுந்த […]

இலங்கை செய்தி

இலங்கை பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை

  • August 30, 2024
  • 0 Comments

இலங்கையில் வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன இதனை வலியுறுத்துள்ளார். சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு அதிக அளவிலான பெரசிட்டமோல் கொடுப்பதனால் வைத்தியசாலைகளில் பல குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. வைத்தியர்களின் பரிந்துரைகளில் பெரசிட்டமோல் மருந்தைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் […]

செய்தி தமிழ்நாடு

சென்னையில் நடைபெறும் பார்முலா-4 கார் பந்தயம்

  • August 29, 2024
  • 0 Comments

சென்னையில் நாளை தொடங்க உள்ள பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் […]

ஆசியா செய்தி

ஷேக் ஹசீனா மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்புப் பாதுகாப்பை ரத்து செய்த வங்கதேசம்

  • August 29, 2024
  • 0 Comments

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் தூதரக கடவுச்சீட்டுகளை ரத்து செய்த சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பாதுகாப்பை வங்காளதேசத்தின் இடைக்கால அரசு திரும்பப் பெற்றுள்ளது. தலைமை ஆலோசகர் பேராசிரியர் முஹம்மது யூனுஸ் தலைமையில் ஆலோசகர்கள் குழு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கான சிறப்புப் பாதுகாப்பை நீக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டம் 2021ஐத் திருத்த முடிவு செய்ததாக செய்தி நிறுவனம் […]

ஆசியா செய்தி

போலியோ தடுப்பூசிக்காக காசாவில் தாக்குதலை இடைநிறுத்த ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

  • August 29, 2024
  • 0 Comments

காஸாவில் போலியோ தடுப்பூசி செலுத்துவதற்காக இஸ்ரேல் 3 நாட்கள் தாக்குதல் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. காசாவில் போலியோ தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஐநா சுகாதார அதிகாரிகளை அனுமதிக்க இஸ்ரேல் மூன்று நாட்களுக்கு “மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு” ஒப்புக்கொண்டுள்ளதாக ஐநாவின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை, ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தாக்குதல் இடைநிறுத்தப்படுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று WHO குறிப்பிட்டுள்ளது. “நாங்கள் விவாதித்து […]

ஐரோப்பா செய்தி

3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட செர்பியா மற்றும் பிரான்ஸ்

  • August 29, 2024
  • 0 Comments

பிரான்சில் தயாரிக்கப்பட்ட 12 ரஃபேல் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் மற்றும் செர்பியா கையெழுத்திட்டுள்ளன. செர்பிய பாதுகாப்பு மந்திரி பிராட்டிஸ்லாவ் கேசிக் மற்றும் டசால்ட் ஏவியேஷன் சிஇஓ எரிக் ட்ராப்பியர் ஆகியோர் “ரஃபேல் கிளப்பில் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முடிவை எடுத்ததற்காகவும், புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு எங்களை அனுமதித்ததற்காகவும் பிரான்ஸ் அதிபருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் கையெழுத்திட்டபோது செய்தியாளர்களிடம் […]

ஆசியா செய்தி

துனிசியாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதி

  • August 29, 2024
  • 0 Comments

துனிசியாவில் உள்ள ஒரு நீதிமன்றம், அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் Mondher Znaidiயை போட்டியிட அனுமதித்துள்ளது. துனிசிய நிர்வாக நீதிமன்றம், ஸ்னாய்டியின் மேல்முறையீட்டை ஏற்க முடிவு செய்ததாகக் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்கட்சி வேட்பாளர்களின் பட்டியலில் Znaidi ஐ சேர்க்கிறது, இதில் அப்தெலத்திஃப் மெக்கி, அயாச்சி ஜம்மெல் மற்றும் Zouhair Maghzaoui ஆகியோர் அடங்குவர். 14 பேரை அதிபர் தேர்தலில் நிறுத்த தடை விதித்த தேர்தலுக்கான சுயாதீன […]

செய்தி விளையாட்டு

பிரபல கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பேயின் எக்ஸ் கணக்கிற்குள் நுழைந்த ஹேக்கர்கள்

  • August 29, 2024
  • 0 Comments

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கில் ஹேக் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பே இதுவரை 331 கோல்களை அடித்துள்ளார். 158 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார். எம்பாபே தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என பலமுறை கூறியுள்ளார். எம்பாப்வேயின் எக்ஸ் கணக்கில் மெஸ்ஸியை குறித்து கிண்டல் செய்தும் ரொனால்டோவை புகழ்ந்தும் பதிவுகள் வந்தன. மான்செஸ்டர் சிட்டியை கிண்டல் செய்தும் பதிவுகள் வந்தன. இதனால் மெஸ்ஸி […]

செய்தி

இலங்கையை சுற்றி நடந்து சாதனை படைத்த இளைஞனை சந்தித்த ஜனாதிபதி

  • August 29, 2024
  • 0 Comments

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இவர் தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டைச் சுற்றி 1500 கிலோமீட்டர் தூரம் நடந்து இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். அதன்போது பேருவளை, அம்பலாங்டிகொடை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, நிலாவெளி, […]

error: Content is protected !!