இலங்கை: மகனுக்கு சூடு வைத்த தகப்பன்! பின்னனியில் வெளியான காரணம்
சேட் பக்கட்டில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபாய் பணத்தை மகன் தந்தைக்கு தெரியாமல் எடுத்ததனால் தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை பாடசாலையில் மாணவன் சோகமாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான். மாணவனின் நிலையை அறிந்த […]













