இலங்கை செய்தி

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு?

  • July 24, 2024
  • 0 Comments

இலங்கையில் சில பகுதிகளில் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு சீர் செய்யப்பட்டுள்ளது. எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், தற்போது இந்த நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாகச் சில இடங்களுக்கு லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. நேற்று முதல் இந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் பெண்ணின் உயிரை பறித்த வளர்ப்பு நாய்

  • July 24, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள கொவெண்ட்ரி (Coventry) நகரில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தாக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Wexford ரோட்டில் இருக்கும் கட்டடத்தில் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடத்தினுள் அந்தப் பெண் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டார். பொலிஸ் அதிகாரிகளின் உதவியோடு அவர் சீக்கிரம் வெளியே கொண்டுவரப்பட்டார். அவருக்கு உயிர்க்காப்பு சிகிச்சை வழங்கப்பட்டும் பலனில்லை. பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நாயை அதிகாரிகள் கைப்பற்றினர். பெண்ணின் மரணம் […]

விளையாட்டு

2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோஹித், கோலி – கம்பீர் வெளியிட்ட அறிவிப்பு

  • July 24, 2024
  • 0 Comments

டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்குஎதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ளஒருநாள் போட்டித் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விலகக்கூடும்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு தற்போது இலங்கை தொடரில் இருவரும் களமிறங்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டா ஸ்டோரீஸ் போலவே கூகுள் போட்டோஸில் வெளியாகும் புதிய அம்சம்

  • July 24, 2024
  • 0 Comments

கூகுள் அதன் போட்டோஸ் அப்ளிகேஷனில் அனைவரும் விரும்பும்படியான ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. ஆன்ட்ராய்டு அதாரிட்டி வெளியிட்ட அறிக்கையின்படி, கூகுள் போட்டோஸ் கூடிய விரைவில் My Week என்ற ஒரு புதிய ஷேரிங் அம்சத்தை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி யூசர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வார நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அம்சத்தைப் போன்றது. போட்டோக்களை செலக்ட் செய்து அதனை ஹைலைட் செய்வதன் மூலமாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பல தொழில்கள் ஆபத்தில் – வெளியான முக்கிய தகவல்

  • July 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வேலைகள் குறித்த புதிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் செலவினக் குறைப்புக்களால் வணிகங்கள் சாதனை அளவில் வீழ்ச்சியடைவதால், உணவு மற்றும் பானங்கள் மற்றும் விருந்தோம்பல் துறை ஆபத்துத் தொழில்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த துறையில் வணிக தோல்வி விகிதம் 7.51 சதவீதத்தில் இருந்து 9.08 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்து வகைகளில் கலை மற்றும் பொழுதுபோக்குத் தொழில்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தன, மேலும் போக்குவரத்து, அஞ்சல் மற்றும் கிடங்குத் தொழில்கள் மூன்றாவது […]

ஆசியா

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

  • July 24, 2024
  • 0 Comments

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 1949ஆம் ஆண்டில் இருந்த 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லை. இதனால் அங்கு ஓய்வூதியம் […]

மத்திய கிழக்கு

காஸாவில் நல்லிணக்க அரசாங்கத்தை அமைக்க இணக்கம்

  • July 24, 2024
  • 0 Comments

14 பாலஸ்தீனப் பிரிவுகள், போருக்குப் பிறகு காசா பகுதியைக் கட்டுப்படுத்த இடைக்கால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில், பெய்ஜிங் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பின்னர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நல்லிணக்கம் என்பது பலஸ்தீனப் பகுதிகளின் உள்விவகாரம் எனவும், அதேவேளை, சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றி அதனை அடைய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் – அமுலாகும் புதிய நடைமுறை

  • July 24, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக, வரி முறையில் சில மாற்றங்களைக் காணப்படவுள்ளது. அதற்கமைய, ஜெர்மனியில் கணவன் மற்றும் மனைவி வருமான வரி செலுத்துவது தொடர்பாக நிதி அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெர்மனியில் திருமணம் முடித்த தம்பதியினருக்கு ஸ்டொயக்லேஸ் (STEUERKLASSE) எனப்படும்ம் வருமான வரி இலக்குகள் 5 மற்றும் 3 ஆக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் கூடுதலான வகையில் 5 என்று சொல்லப்படும் வரி […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் எதிர்பார்த்ததை விட பாரிய அளவு வீழ்ச்சியடைந்த பணவீக்கம்

  • July 24, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஜூன் மாதம் அது 2.4 சதவீதம் பதிவானது. நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட அது குறைவாகும். தனியார் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத அடிப்படைப் பணவீக்கம் குறைந்துள்ளது. மே மாதம் 3.1 சதவீதம் பதிவாகிய அது கடந்த மாதம் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலையும் மெதுவாக ஏற்றங்கண்டுள்ளது. உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை சீராக உள்ளது. சிங்கப்பூர் நாணய வாரியம் முழு ஆண்டுக்கான […]

இலங்கை

இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்த பெண்

  • July 24, 2024
  • 0 Comments

கட்டாரில் முறையான உரிமம் இன்றி வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய பெண் கட்டாரில் வேலை வழங்குவதற்காக தலா 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மூன்று பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நாட்டில் உறுதியளித்தபடி வேலை கிடைக்காததால், அவர்கள் தீவுக்குத் திரும்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, […]

error: Content is protected !!