வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் சாவகச்சேரி நீதிமன்றில், நீதவான் அ.யூட்சன் முன்னிலையில் இன்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட ஐந்து (5) வழக்குகளே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தன. இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் ஆஜராகியிருந்தார். வைத்தியர் அர்ச்சுனா, ஊழல், மோசடிகளை தடுக்கும் முகமாகவே கடமை நேரத்தில் வைத்தியர்கள் வெளியே […]













