ஆசியா செய்தி

சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

  • July 28, 2024
  • 0 Comments

சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண் சரிவால் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கேமி புயல் சீனாவை […]

விளையாட்டு

இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

  • July 28, 2024
  • 0 Comments

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் […]

ஆசியா செய்தி

மசூத் பெசெஷ்கியானை புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஈரானின் உச்ச தலைவர்

  • July 28, 2024
  • 0 Comments

ஈரானின் புதிய ஜனாதிபதியாக Masoud Pezeshkian உச்ச தலைவரால் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தனது நான்காண்டு ஜனாதிபதி பதவியின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு விழாவில், Masoud Pezeshkian ஈரானிய மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகவும், மேற்கு நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இது டெஹ்ரானின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் ஒரு முன்நிபந்தனையாக அவர் கருதுகிறார். ஜூலை 5 ஆம் தேதி 49.7% வாக்குப்பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, சீர்திருத்தவாதியான Pezeshkian, அடுத்த சில நாட்களில் புதிய வெளியுறவு மந்திரி […]

இலங்கை செய்தி

பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

  • July 28, 2024
  • 0 Comments

பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற “ஜெயகமு ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆதரவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கை செய்தி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

  • July 28, 2024
  • 0 Comments

70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் […]

இந்தியா செய்தி

தமிழ் ரொக்கர்ஸ் அட்மின் கைது – வெளியான பகீர் கும்பல்

  • July 28, 2024
  • 0 Comments

மதுரையைச் சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கேரளாவில் ராயன் திரைப்படத்தை திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்த போது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது தமிழ்ராக்கர்ஸ் நிறுவனம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு CD, DVD இருந்த காலத்தில் Tamil Rokkers என்ற பெயரை கேட்டாலே திரை உலகினர் அதிர்ச்சி அடையும் நிலை இருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த மொழி […]

ஆசியா செய்தி

வங்கதேசத்தில் மீண்டும் வழமைக்கு திரும்பிய இணைய சேவை

  • July 28, 2024
  • 0 Comments

அரசு வேலைகளில் ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான கொடிய நாடு தழுவிய வன்முறைக்கு மத்தியில் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு, வங்கதேசத்தில் மொபைல் இணைய இணைப்பு மீட்டமைக்கப்பட்டது. செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (ICT) Zunaid Ahmed Palak, இணைப்பு மீட்கப்பட்ட மூன்று நாட்களுக்கு அனைத்து பயனர்களுக்கும் 5GB இணையம் இலவசமாக வழங்கப்படும் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது. […]

இலங்கை செய்தி

நாற்பது கிலோ எலிக்கறியுடன் இருவர் கைது

  • July 28, 2024
  • 0 Comments

கந்தளாய் நீர்த்தேக்கத்தில் எலிகள் மற்றும் ஏனைய வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலிக்கறியுடன் இன்று (28) கைது செய்யப்பட்டதாக சீகிரிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் […]

இலங்கை செய்தி

உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம்

  • July 28, 2024
  • 0 Comments

முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் (இணக்கம்) மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் ஊடாக 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பருவத்தில் தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமை அதிகரித்துள்ளமையினால், தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் ஆணைக்குழுவுக்கு சிரமம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டார். அதன்படி, […]

இலங்கை செய்தி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

  • July 28, 2024
  • 0 Comments

ஆசிய கிண்ணத்தை வென்ற சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்துவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுதத ஜனாதிபதி வாழ்த்து கூறியுள்ளார். “தோல்வியடையாத உங்கள் தொடர் உங்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் குழு உணர்விற்கு சான்றாகும். நீங்கள் எங்கள் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று ஜனாதிபதி கூறினார். எதிர்காலத்தில் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எவ்வாறு உதவுவது என்பதில் கவனம் செலுத்துவதாகவும், […]

error: Content is protected !!