உலகம் செய்தி

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்குவதை நிறுத்திய பில்லியனர் கென்

  • January 31, 2024
  • 0 Comments

கென் கிரிஃபின் என்று பிரபலமாக அறியப்படும் கென்னத் சி.கிரிஃபின் ஒரு பில்லியனர் மற்றும் ஹெட்ஜ்-நிதி மேலாளர், அவர் பல ஆண்டுகளாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு $500 மில்லியனுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார். திரு கிரிஃபின் உயரடுக்கு அமெரிக்க கல்லூரிகள் எதிர்கால தலைவர்களுக்கு பதிலாக “whiny ஸ்னோஃப்ளேக்ஸ்” உற்பத்தி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் யூத-விரோதத்தை கையாண்டது தொடர்பாக எழுந்த சலசலப்புகளுக்கு மத்தியில் நன்கொடைகளை நிறுத்திய […]

ஆசியா செய்தி

செங்கடல் கொள்கலன் கப்பல் போக்குவரத்து 30% குறைந்துள்ளது – IMF

  • January 31, 2024
  • 0 Comments

யேமனின் ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தொடர்வதால் செங்கடல் வழியாக கொள்கலன் கப்பல் போக்குவரத்து இந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. “கன்டெய்னர் ஷிப்பிங் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் குறைந்துள்ளது,” என்று IMF இன் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய துறையின் இயக்குனர் ஜிஹாத் அஸூர் கூறினார், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் வர்த்தகத்தின் வீழ்ச்சி துரிதப்படுத்தப்பட்டது” என்று கூறினார். ஈரான் ஆதரவு ஹூதிகள் நவம்பர் 19 முதல் […]

ஐரோப்பா

போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்

ரஷ்யாவும் உக்ரைனும் போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டதாக மொஸ்கோ அறிவித்துள்ளது உக்ரைனில் இருந்து 195 ரஷ்ய போர்க் கைதிகள் திரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது . கடந்த வாரம் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து இதுபோன்ற முதல் பரிமாற்றம் இதுவாகும், மேலும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட 207 உக்ரைன் வீரர்கள் திரும்பியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்துள்ளார்  

இலங்கை செய்தி

மீண்டும் எரிபொருள் விலைகளில் மாற்றம்

  • January 31, 2024
  • 0 Comments

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும். பெற்றோல் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும். மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும். […]

விளையாட்டு

ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்

  • January 31, 2024
  • 0 Comments

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. பீகார் சிறுவன் சூர்யவன்ஷி அதை முறியடித்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கை கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அறவிடப்படவுள்ளது.

பொழுதுபோக்கு

40 வயதில் திருமணம் செய்து கொள்ளவுள்ள எஸ்.ஜே.சூர்யா பட நடிகை!

  • January 31, 2024
  • 0 Comments

நடிகை மீரா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த செய்தியை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. மீரா சோப்ர என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடுத்து ‘மருதமலை’, ‘லீ’ போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இப்போது, தமிழ்ப் படங்களைக் காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோர் இவரது சகோதரிகள். […]

பொழுதுபோக்கு

இங்க இவ்வளோ வேல இருக்கு… ஆனால் ஆண்டவர் பறந்தார் அமெரிக்காவுக்கு

  • January 31, 2024
  • 0 Comments

விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாத நிலையில், இந்த வருடம் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அடுத்தாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தங் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் அபரிவிதமான வித்தியாசம் இருக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய கமல் தயங்க மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்கள் […]

வட அமெரிக்கா

நான்காவது முறையாகவும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்

  • January 31, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை குடியரசுக் கட்சி எம்பி கிளாடியா டென்னி முன்மொழிந்தார்.இந்த சிறப்பு விருதுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். மத்திய கிழக்கில் கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் டிரம்ப் முக்கியப் பங்காற்றியதாக டென்னி தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மத்திய கிழக்கில் கூடுதல் சமாதான உடன்படிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று பல […]

உலகம்

சீன உளவாளி என சந்தேகத்தின் அடிப்படையில் பந்தயப் புறாவை 8 மாதம் சிறையில் வைத்திருந்த மும்பை பொலிஸார்!

  • January 31, 2024
  • 0 Comments

சீன தேசத்து உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மும்பை போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புறா ஒன்று 8 மாத ‘சிறைவாச’த்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. பகை தேசங்கள் மத்தியில் உளவு பார்ப்பதற்கு என செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் வந்துவிட்டன. இந்த உளவு சாதனங்களை ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் அபரிமிதமான உளவுத் தகவல்களை பெற முடியும். இந்த நவீன அறிவியல் முன்னேற்றங்கள் இல்லாத காலத்தில் தகவல் தொடர்புக்கும், அதன் வழியே உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பறவைகளை, குறிப்பாக புறாக்களை நாடுகள் […]