ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்: மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை
கால்நடைகள் என்பது வெறும் உயிர் அல்ல.அது உணவளிக்கும் ஒரு உயிரினம். அதன் இடங்களை அபகரித்து அதனை வீதிகளில் திரிவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் எமது பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்கமுன்வர வேண்டும் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி 16வது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் […]