பாகிஸ்தானில் மசூதியை இலக்கு வைத்து வெடி குண்டு தாக்குதல்!! 50 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் முகமது நபியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மக்கள் கூடியிருந்த வேளையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஸ்துங் நகரில் நடைபெற்ற மதக் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என்று அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நிலைமையை அடுத்து அதிகாரிகள் உடனடியாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]