புளோரிடாவில் அதிக்கூடிய வெப்பநிலையில் காரில் சிக்கிக்கொண்ட 16 மாதக் குழந்தை!
புளோரிடாவில் (Florida) 18 மாதக் குழந்தையொன்று நேற்று காரில் சிக்கிக்கொண்ட நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
காரின் வெப்பநிலை 29C (85F) எட்டிய நிலையில், குழந்தை சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாயார் 999 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து உதவிக் கோரிய நிலையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழந்தையை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தின் சாவியை தற்செயலாக உள்ளே விட்டுச் சென்றமையால் இந்நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் இந்த சம்பவத்தை ஒரு விபத்தாகக் கருதி, எந்த குற்றவியல் தவறும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.





