ரஷ்யாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி -புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

ரஷ்யாவின் உரால்ஸில் (Urals) உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானின் (Kazakhstan) எல்லையை ஒட்டிய செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) பிராந்தியத்தின் கோபிஸ்க் (Kopeisk) மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்திற்கான காரணத்தை ஆளுநர் வெளியிடவில்லை. இருப்பினும் ட்ரோன் தாக்குதலால் வெடி விபத்து ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமான நாளைய தினம் துக்கநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை புலனாய்வாளர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.