இலங்கை செய்தி

விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாடு முழுவதும் சென்று  மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும்  விமானப்படையின் “ஹெரலி  பெரலி”  வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை  முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில்  நேற்று  (01)  ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும்  உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்படும்  பலா சார்ந்த  உற்பத்திகளுக்கான  உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும்  பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன்  நோக்கமாகும்.

இந்த  வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் மாத்திரம்  70 ஆயிரம் பலாமரக் கன்றுகளை நடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

“விமானப்படை ஹெரலி பெரலி என்ற பெயரில் பலாமரக் கன்றுகள்  தொடர்பில் எழுதப்பட்ட  நூலின் பிரதியொன்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

“விமானப்படை ஹெரலி பெரலி என்னும் நூலில்  பலாமரக் கன்றுகளின் நடுகை மற்றும் அதனை சார்ந்த உற்பத்திகள் பற்றிய உள்ளீடுகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார  தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,  பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர்  (ஓய்வு)  ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அநுராதபுரத்திலுள்ள  விமனாப்டை முகாமில் முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்  ஆர்ப்பாட்டக்காரர்களால்  பாராளுமன்றம் கையகப்படுத்தப்படுவதையும்,  அதனால் ஏற்படவிருந்த வன்முறைகளையும்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமைக்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை