யாழ் நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுவதுடன்இ அவர்கள் அழைத்து வரப்பட்டதும் மேலதிக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)