பிரித்தானியா: பயிற்சி மருத்துவர் வேலைநிறுத்தம் தவிர்க்கப்படுமா?
இங்கிலாந்தில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த இளம் மருத்துவர்களின் (Junior Doctors/Resident Doctors) வேலைநிறுத்தம், பிரித்தானிய அரசு மருத்துவ சங்கத்துக்கு (British Medical Association) ஒரு புது சலுகையை வழங்க முன் வந்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்படலாம் எனத் தெரிகிறது.
மருத்துவர்களின் சங்கம் இந்தச் சலுகையை அதன் உறுப்பினர்களின் சம்மதத்தை வைத்தே அடுத்து வரும் நாட்களில் எந்தமுடிவையும் எடுக்கமுடியும் என்றும், உறுப்பினர்கள் இதற்கு ஆதரவளித்தால், டிசம்பர் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கவிருந்த ஐந்து நாள் வேலைநிறுத்தம் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளது .
மேலும் அவர்கள் வழங்க முன்வந்த சலுகைகள் பின்வருமாறு
சிறப்புப் பயிற்சிப் பதவிகளை (Specialist training posts) விரைவாக விரிவுபடுத்துதல்.
பரீட்சைக் கட்டணம் போன்ற சொந்த செலவினங்களை ஈடுசெய்தல்.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் சம்பள அதிகரிப்புக்கான எந்த வாக்குறுதியும் சேர்க்கப்படவில்லை.
சுகாதார அமைச்சானது இளம் மருத்துவர்களுக்கு (Junior Doctors/Resident Doctors) கடந்த மூன்று வருடங்களில் கிட்டத்தட்ட 30% சம்பள உயர்வு வழங்கியுள்ளது, அதனால் மீண்டும் சம்பளம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்பதில் சுகாதாரச் அமைச்சர் (Wes Streeting) உறுதியாக உள்ளார்.




