டுபாய் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் பாரிய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டுபாயின் புகழ்பெற்ற ‘பாம் ஜுமேரா’ (Palm Jumeirah) பகுதியில் உள்ள ‘ஃபேர்மாண்ட் தி பாம்’ (Fairmont The Palm) ஐந்து நட்சத்திர விருந்தகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பஹ்ரைன் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு (Fifth Fleet) தலைமையகத்திற்கு அருகிலும் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.







