ஜா-எலயில் துப்பாக்கிச் சூடு
ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





