மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.
அதன்படி ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களது வான்பரப்புகளை மூடியுள்ளன.





