செய்தி தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பாவை பாஜகவினர்  வரவேற்றனர்.

தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 100% பாஜக வெற்றி பெறும். வேறு யாரும் வெற்றி பெற முடியாது.

கர்நாடகத்தில் நூறு சதவீதம் மெஜாரிட்டியோடு பாஜக வெற்றி பெறும்.

ராகுல்காந்தி பதவி நீக்கம் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாங்கள் கட்டாயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம்.

அரசியலமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட தனி இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லை. காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம். இதனால் பாதிப்பு ஏற்படாது.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அதன் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என பேசினார்.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!