மொஸ்கோவில் ஒன்றுக்கூடும் ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்கள்!
ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் உறுதிப்படுத்தினார்.
பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இப்பகுதியில் விரைவில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
அமைச்சரின் கூற்றுப்படி, துருக்கி, ரஷ்ய மற்றும் சிரிய பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உளவுத்துறை தலைவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாஸ்கோவில் சந்தித்து கூட்டங்களைத் தொடர முடிவு செய்தனர். இதன்போது அடுத்தக் கூட்டத்தில் ஈரான் பங்கேற்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன்படி அடிப்படையில் அடுத்தக் கூட்டத்தில் ஈரான் பங்கேற்கவுள்ளது.
அங்காரா மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையில் போர்நிறுத்தத்தை எளிதாக்க விரும்புவதாக பலமுறை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.