மெத்தை கம்பெனி மொத்தமா தீ
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக் உசேன். இவர் கோவைபுதூர் பகுதி அறிவொளி நகரில் மெத்தை கம்பனி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று காலை மின்சார கசிவு காரணமாக கடையில் தீ பிடித்து பரவ துவங்கி உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் (பஞ்சு, நார்) தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடைகாலத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்புள்ள சாதனங்களை சரி செய்து வைத்து கொள்ளுமாறு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.