பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை தனித்த இஸ்லாமியர்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா கடந்த வாரம் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு, பக்தர்கள் முத்துமாரி அம்மனுக்கு பால்குடம், அக்கினி சட்டி,வேல் காவடி,பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதல் நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்கள்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்க காரைக்குடி செக்காலை ரோடு பஜார் பள்ளிவாசலில் இருந்து,இஸ்லாமியர்கள், பக்தர்களின் மீதும்,சாலைகளிலும் தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை தனித்தனர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான இஸ்லாமியர்களின் செயல் பக்தர்கள்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.
(Visited 2 times, 1 visits today)