தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்களை அழைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை!
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் முத்துறைகளுக்கும் இடையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் ;இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றிருந்தால் சிறந்த அரசியல் மாற்றத்திற்கான ஆரம்பம் தோற்றம் பெற்றிருக்கும், இதனால் தான் அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.