திருமணத்திற்கு அழைக்கவில்லை என Reels வெளியிட்ட சிறுமியுடன் விஜய் தேவரகொண்டா!
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தனது குட்டி ரசிகையை சந்தித்திருக்கும் Reels இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு அழைக்கவில்லை என ‘லக்கி’ என்ற சிறுமி கவலையுடன் பகிர்ந்த Reels பலரையும் கவர்ந்தது.
இந்த ரீல்ஸ் குறித்து விஜய் தேவரகொண்டா கவனத்திற்கு சென்றதும், அவர் உடனடியாக பதிலளித்து, “உனக்கு என்ன பிடிக்கும் என்று சொல், உனக்குப் பிடித்ததை எல்லாம் வீட்டிலேயே ஏற்பாடு செய்கிறோம்” என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
மேலும், அந்த சிறுமியை நேரில் சந்திக்க தனது வீட்டிற்கே அழைத்துள்ளார்.
அதன்படி, ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிறுமி லக்கி, விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடியை சந்தித்துள்ளனர்.
இருவரும் சிறுமிக்கு விருந்து அளித்துள்ளதுடன், சிறுமியுடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றும் பதிவு செய்துள்ளனர். இது குறித்த Reels , ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.






