ஈக்வடாரில் ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வெடிபொருட்கள்
ஊடகவியலாளர்களை குறிவைத்து தபால் மூலம் வெடிபொருட்களை அனுப்பிய வழக்கு தொடர்பாக ஈக்வடார் அரசாங்கம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்த பென் டிரைவை கணினியுடன் இணைக்கும் போது வெடித்து சிதறியதில் ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பின்னர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் உள்ள ஐந்து நிறுவனங்களுக்கு வெடிபொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





