அமெரிக்க சிறைக் காவலர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள்
அமெரிக்க நகரமான சென் பிரான்சிஸ்கோவிற்கு கிழக்கே உள்ள கூட்டாட்சி சீர்திருத்த நிறுவனம் (Federal Correctional Institution) முழுவதும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வழக்கமாகியுள்ளதாக பிரிட்டிஷ் செய்தித்தாளான தி கார்டியன் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் டப்ளினில் உள்ள ஃபெடரல் சிறையில் பல காவலர்களினால் தான் அனுபவித்த கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் குறித்து முன் வந்து தெரிவித்துள்ள 31 வயதான கிறிஸ்டலின் கதையை இந்த அறிக்கை மேற்கோள்காட்டி செய்து பிரசுரித்துள்ளது.
ஆனால் இப்போது கிரிஸ்டல் குடியேற்றக் காவலில் இருக்கிறார், அவர் குழந்தையாக இருந்த மெக்சிகோவிற்கு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், காவலர்கள் தங்கள் காவலில் இருந்த பெண்களை திட்டமிட்டுப் பலிகடா ஆக்கினார்கள், அவர்களை மிரட்டி கட்டுப்படுத்தினார்கள், குற்றங்களை மறைப்பதற்காகப் பொய் சொன்னார்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.
தப்பிப்பிழைத்தவர்களில் குறைந்தபட்சம் 26 பேர் இப்போது நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்கின்றனர், இதில் பலர் நேரடியாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர் மற்றும் குறைந்தது பாதிக்கப்பட்டவர்கள் எட்டுப்பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று சட்ட வழக்கறிஞர்களின் கூட்டணியை மேற்கோள் காட்டி அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
சிறையில் ஒருவர் பாதிக்கப்படக்கூடிய மிகக் கொடூரமான வழிகளில் கூட்டாட்சி ஊழியர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் உள்ளனர், என்று ஓக்லாந்தைச் சேர்ந்த இலாப நோக்கற்ற சென்ட்ரோ லீகல் டி லா ராசாவின் மேற்பார்வை வழக்கறிஞர் சூசன் பீட்டி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தானது கிறிஸ்டல் மற்றும் மற்ற உயிர் பிழைத்தவர்கள், கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பவும், அரசாங்கத்தின் கைகளில் அவர்கள் அனுபவித்த அதிர்ச்சியிலிருந்து குணமடையவும் அவர்களுக்குத் தேவை மற்றும் தகுதி உள்ளது. மாறாக, அரசாங்கம் அவர்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறது, என்று அவர் கூறினார்.