உலகம் செய்தி

அமெரிக்க , பிரிட்டிஷ் தளங்கள் மூலம் ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது -செலென்ஸ்கி குற்றச்சாட்டு

வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இராணுவத் தளங்கள், மேலும் சாகோஸ் தீவுகளில் உள்ள Diego Garcia தளத்தை குறிவைத்து நடந்த தாக்குதல்களுக்கு ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்ததாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தொலைபேசியில் இருந்த உளவுத்துறை அறிக்கையை வாசித்து காட்டினார்.

அந்த அறிக்கையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், டியாகோ கார்சியா தளம் மற்றும் வளைகுடா முழுவதும் உள்ள எண்ணெய் கிணறுகள் மீது ரஷ்ய செயற்கைக்கோள்கள் கண்காணிப்பு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போரினால் உருவான உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, உக்ரைனின் போர்திறனை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்றும் செலென்ஸ்கி கூறினார்.

பிபிசி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போதைக்கு உக்ரைன் இராணுவத்துக்கு போதுமான எரிபொருள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!