உக்ரைன் ஜனாதிபதி வளைகுடா நாடுகளுக்கு அவசர விஜயம்!
உக்ரைன் ஜனாதிதி Volodomyr Zelensky கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவுடனான போரில் தமது நாடு பெற்ற ட்ரோன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளும் வகையிலேயே அவர் பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்குப் பிரதிபலனாக, உக்ரைனின் வான் பாதுகாப்புக்குத் தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை செல்வந்த நாடுகளிடமிருந்து திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கு போரின் பக்கம் திரும்பியுள்ளதால், உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நட்பு நாடுகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த ராஜதந்திர நகர்வு உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.





