zee தமிழ் அதிரடியாக எடுத்துள்ள முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சின்னத்திரை சீரியல்கள் என்றால் சன்டிவி தான் என்ற காலம் போய் தற்போது விஜய் டிவி மற்றும் zee தமிழ் சீரியல்கள் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றன.
டாப் 10 டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு நிகராக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் இடம்பிடிக்கின்றன.
இந்த நிலையில், zee தமிழ் தொலைக்காட்சியில் குறைவான டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வந்த மூன்று சீரியல்களை விரையில் முடித்துவிட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அந்த மூன்று சீரியல்களின் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த மூன்று சீரியல்கள் என்ன என்பதைப்பற்றி பார்ப்போம்…
கெட்டி மேளம்
zee கன்னடத்தில் ஒளிபரப்பான லட்சுமி நிவாஸா சீரியலின் ரீமேக்காக zee தமிழில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் கெட்டி மேளம்.
ஆனால் இந்த கதைகூட சுமார் 10 வருடங்களுக்கு முன் ஹிந்தியில் ஒளிபரப்பாகிய சீரியல் என்பது யாருக்கும் தெரந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த சீரியல் நல்ல கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வந்தபோதும் அதற்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் தற்போது முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம். இதனால் விரைவில் இதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
நினைத்தாலே இனிக்கும்
ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நினைத்தாலே இனிக்கும் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
ஆனால் போகப் போக கதைக்களம் சொதப்பியதால் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் கம்மியாக தொடங்கியது. இதனால் அந்த சீரியலையும் இந்த மாதத்தில் முடிவுக்கு கொண்டு வர உள்ளார்களாம்.
மாரி
ஜீ தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் மாரி. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த சீரியலும் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலுக்கும் எண்டு கார்டு போட முடிவெடுத்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.
இந்த சீரியலின் கிளைமாக்ஸும் விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.