‘வா வாத்தியார்’ கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கார்த்தியின் உருக்கமான பொங்கல் வாழ்த்து!
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “பொங்கல் பொங்கட்டும்! உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்! உழவர்களின் வாழ்வு சிறக்கட்டும்! அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!” எனக்கூறி அவர் பொங்கல் பானையுடன்தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்
தனது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், விவசாயிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் இந்த வாழ்த்துச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.





